காவிரி போராட்ட எதிரொலி: சென்னை மெரினா கடற்கரை சாலையில் வாகனங்கள் செல்ல இன்றும் தடை
காவிரி போராட்ட எதிரொலியாக சென்னை மெரினா கடற்கரை சாலைக்குள் இன்றும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காவிரி மேலாண்மை வாரிய்ம அமைக்க கோரி சனிக்கிழமை இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து சென்னை மெரினா கடற்கரைக்கு செல்லும் வாகனங்களுக்கு இன்று 2-ஆவது நாளாக தடை விதிக்கப்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீட்டுக்காக திட்டம் ஒன்றை 6 வாரங்களுக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை. இந்நிலையில் நீதிமன்றம் விதித்த கெடுவும் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் போராட்டம் நடத்தும் நிலை ஏற்பட்டது. சென்னை மெரினா, பெசன்ட் நகரில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

கடற்கரையை மூடினர்
இதனிடையே ஜல்லிக்கட்டுக்காக போராடியதை போல் நீருக்காக போராட வேண்டும் என்று சமூகவலைதளங்களில் தகவல் பரவியுள்ளதை அடுத்து சென்னை மெரினா கடற்கரையை போலீஸார் மூடினர்.

நடைபயிற்சி
வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடற்கரைக்குள் நுழைய போலீஸ் அனுமதிக்கவில்லை.
சர்வீஸ் சாலை முழுவதும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளது. சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி செய்ய அனுமதி தரப்படவில்லை.

இன்று அனுமதி மறுப்பு
கடற்கரை சாலையில் உள்ள நடைபாதையில் மட்டுமே நடைபயிற்சி செய்ய அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில் கடற்கரைக்கு செல்ல இன்று 2-ஆவது நாளாக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் 1000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

போலீஸ் எச்சரிக்கை
மெரினா கடற்கரைக்கு செல்வோரை போலீஸார் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் குடும்பத்துடன் கடற்கரைக்கு செல்லும் பொதுமக்களுக்கு யாரும் தொந்தரவு செய்ய கூடாது என்று காவல் துறை இணை ஆணையர் அன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications