ஜெ. நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் அஞ்சலி செலுத்தினார்.

உயர்நீதிமன்ற கட்டடத்தின் 125வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Central minister Ravishangar prasath paid tribute in Jayalalitha's memorial

இதைத்தொடர்ந்து எம்ஜிஆர் நினைவிடத்திலும், பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் அவர் மலர் வளையம் வைத்து மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த மாநிலங்களின் விவகாரங்களிலும் மத்திய அரசு தலையிடாதது போன்று, தமிழக அரசின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்றார்.

நீட் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார். அப்போது அதிமுக எம்.பி.நவநீதகிருஷ்ணன், பாஜக நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central minister Ravishangar prasath paid tribute in Jayalalitha's memorial at Chennai marina. He said central govt not interfere in the state issues.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற