சென்னையில் மழை, வெள்ள பாதிப்பு பகுதிகளில் சாவகாசமாக ஆய்வு செய்யும் மத்திய குழு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். வெள்ளம் வடிந்தவுடன் ஆய்வு செய்ய வந்ததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

வடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அப்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 நாட்களுக்கு கனமழை கொட்டித் தீர்த்தது.

Central team of experts review in Chennai flood hit regions

இதனால் கடந்த 2015 சென்னை வெள்ளத்தின் போது தத்தளித்ததை போல் இடுப்பளவு நீரில் தாம்பரம் ,முடிச்சூர், வரதராஜபுரம் பகுதி என பல்வேறு இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. மக்களின் பெரும்பாலான பொருட்கள் வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டன. மின்கம்பங்கள் சாய்ந்தன.

இந்நிலையில் சென்னை, ஓகி புயல் பாதித்த குமரி ஆகிய மாவட்டங்களை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் நேற்று வந்தனர். இதையடுத்து ராயபுரம், மேடவாக்கம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது.

மத்திய குழு முறையாக ஆய்வு மெற்கொள்ளவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வெள்ளமே வடிந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு மத்திய குழு ஆய்வு மேற்கொள்ள வந்திருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

மேலும் இத்தகைய ஆய்வின் மூலம் முறையான தகவல்கள் எதையும் மத்திய குழு திரட்ட முடியாது என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையின் புறநகர் பகுதிகளில் ஆய்வு செய்து விட்டு முதல்வருடன் ஆலோசனை செய்வர். அதன்பின்னர் டெல்லி சென்று தங்களது ஆய்வறிக்கையை தாக்கல் செய்வர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Central team of experts review in Chennai flood hit regions. Chennai ,Kanchi, Tiurvallur hit severely in the North East Monsoon rain.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற