கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் 300 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நீலகிரி: கோடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணிபுரிந்த ஓம்பகதூர் என்பவர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார். எஸ்டேட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டது.

Charge sheet filed on the Kodanadu bungalow estate security murder case

இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தொடர்பாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீலகிரி காவல்துறையினர் அறிக்கை தாக்கல் செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்ட 11 பேரில் ஒருவர் சாலை விபத்தில் இறந்துவிட்ட நிலையில் 10 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோடநாடு கொலை தொடர்பாக 10 பேர் சிறையில் உள்ள நிலையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு சம்பந்தமாக, 300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கோத்தகிரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், போலீஸார் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் 10 பேர் சம்பந்தப்பட்டு உள்ளதாகவும் , 97 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் பத்திரிகை
யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Charge sheet filed on the Kodanadu bungalow estate security murder case. Charge sheet filed on 10 members in the Kothagiri court.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற