கோர்ட் அவமதிப்பு வழக்கு: மாஜி மாநில தேர்தல் ஆணையர் ஆஜராக ஹைகோர்ட் உத்தரவு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க சீதாராமன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி செயலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்தவில்லை என திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்னாள் தேர்தல் கமிஷனர் சீதாராமன் ஆஜராகவில்லை.

Chennai High Court ordered the former state election commissioner Sitharaman to appear in the court

இதனையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

இதனை விசாரித்த சென்னை ஹைகோர்ட் இதுதொடர்பாக 4 வாரங்களுக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் தேர்தல் ஆணையர் சீதாராமன், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி செயலாளர் உள்ளிட்ட 6 பேருக்கு உத்தரவிட்டது.

ஜூலை மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என உறுதி அளித்தபடி ஏன் தேர்தலை நடத்தவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The Chennai High Court has ordered the former state election commissioner Sitharaman to appear in the court on the local body election issue. court also ordered Sitharaman, Chennai Corporation Commissioner Karthikeyan and Rural Development Secretary were among six persons to be appeared within 4 weeks.
Please Wait while comments are loading...