சென்னை பெருநகரத்தின் எல்லை விரிவாக்கம்... 1709 கிராமங்கள இணைப்பு - அரசாணை

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னை விரிவாக்கப்பட்டது- வீடியோ

  சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் அரக்கோணம் பகுதிகளை சென்னை பெருநகரத்துடன் உள்ளடக்கி 8878 ச.கி.மீ அளவிற்கு விரிவாக்கம் செய்யப்படுகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் 3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளை இணைப்பது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  சென்னை முதல் அரக்கோணம் வரை 8878 சதுர கி.மீ பகுதி ஒருங்கிணைந்து நகர்மயம் ஆவதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் சென்னை பெருநகர குழுமத்தின் எல்லைக்குள் வருகிறது வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், நெமிலி தாலுக்காக்கள் சென்னை பெருநகர குழுமத்திற்குள் வருகிறது

  விரிவடைந்த சென்னை

  விரிவடைந்த சென்னை

  சென்னை பெருநகரம் பரந்து விரிந்து வருகிறது. இதனால் பெருநகர வளர்ச்சி குழுமமாகத் தற்போது மாற்றப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து மக்கள்தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பெருநகர குழுமம் கடந்த 2008ஆம் ஆண்டு இரண்டாவது மிகப்பெரிய திட்டத்தை வெளியிட்டது.

  1கோடியே 25 லட்சம் மக்கள் தொகை

  1கோடியே 25 லட்சம் மக்கள் தொகை

  அதன்படி வருகிற 2026ஆம் ஆண்டில் மக்கள்தொகை 1 கோடியே 25 லட்சம் ஆக அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாநகரின் வளர்ச்சியைச் சமநிலைப்படுத்தவும், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பை உருவாக்கவும் புறநகர் பகுதிகள் உருவாக்கப்பட்டன.

  சென்னை புறநகர்

  சென்னை புறநகர்

  குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் பெருமளவில் தொழிற்சாலைகள் உள்ளன. அதனால் அங்கும் மக்கள் குடிபெயர்ந்து வருகின்றனர். இதுபோன்ற காரணங்களால் சென்னையின் புறநகர் பகுதியும் மிக அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மேலும் பல தொழிற்சாலைகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  சென்னையுடன் இணைப்பு

  சென்னையுடன் இணைப்பு

  இதனால் அங்கு ஒழுங்கற்ற முறையில் உருவாகும் கட்டமைப்புகளைச் சீரமைக்க வேண்டிய நிலை பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பெருநகரின் எல்லையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையைப் பெருநகரமாக்க திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய இரண்டு மாவட்டங்கள் இணைக்கப்படுகின்றன. வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் தாலுகாவும் சேர்க்கப்படுகிறது.

  8,878 சதுர கி.மீ பரப்பளவு

  8,878 சதுர கி.மீ பரப்பளவு

  சென்னை பெருநகரம் தற்போது 1,189 சதுர கிலோமீட்டர் பரப்பளவு உள்ளது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய திட்டத்தின்மூலம் சென்னை பெருநகரம் 8,878 சதுர கி.மீட்டராக விரிவடையும். இதன்மூலம் சென்னை பெருநகரம் 7 மடங்கு பெரியதாகிறது.

  இப்போது சென்னை பெருநகருடன் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில பகுதிகள் இணைந்துள்ளன. தற்போது இம்மாவட்டங்கள் முழுவதும் சென்னையுடன் இணைகின்றன. இத்திட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு பரிந்துரைக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குப் பிறகு தமிழக அரசு சென்னை பெருநகரை மேலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.

  அகண்ட சென்னை

  அகண்ட சென்னை

  காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் குறிப்பிட்ட சில பகுதிகள் சென்னை பெருநகர குழுமத்தின் எல்லைக்குள் வருகிறது வேலூர் மாவட்டத்தின் அரக்கோணம், நெமிலி தாலுக்காக்கள் சென்னை பெருநகர குழுமத்திற்குள் வருகிறது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் 3 மாவட்டங்களை சேர்ந்த சில பகுதிகளை இணைப்பது தொடர்பான அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. 1709 சிறு கிராமங்கள் சிஎம்டிஏவின் விரிவுபடுத்தப்பட்ட எல்லைக்குள் வருகின்றன. இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்க வேண்டும் என

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Six years after it proposed to expand the Chennai Metropolitan Area (CMA), the government is formalise it with a notification on Monday.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற