வீட்டுக்குள்ளும் வெள்ளம்.. விடிய, விடிய தவித்த மக்கள்.. சிட்லப்பாக்கத்தையும் கவனியுங்கள் அதிகாரிகளே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியதுமே முதல் வேலையாக மழை சென்னையை புரட்டிப் போட்டுள்ளது.

கொரட்டூர், சிட்லபாக்கம் உள்ளிட்ட நகரின் பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளது. சிட்லப்பாக்கத்தின் சில ஏரியாக்களில் சமையலறை உள்ளிட்ட பகுதிகளிலும் தண்ணீர் புகுந்துவிட்டது.

Chennai Netizens do sharing flood picture and video

வீட்டுக்குள் தண்ணீர் தேங்கி நிற்பதால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து நேற்று இரவு முதல் விடிய விடிய மழை நீரை வெளியேற்றினர்.

அதேநேரம், மீடியா செய்திகளில், சென்னையின் பிற பகுதிகள் பெரும் அளவுக்கான முக்கியத்துவத்தை சிட்லப்பாக்கத்தில் ஏற்படும் பாதிப்புகள் பெறுவதில்லை. இதை நெட்டிசன்கள் சிலர் ஆதங்கத்தோடு பகிர்ந்து வருகிறார்கள்.

அப்படித்தான் இந்த நெட்டிசனும் சிட்லப்பாக்கம் பகுதியில் வீட்டை சூழ்ந்துள்ள வெள்ள பாதிப்பு குறித்த புகைப்படம், வீடியோவை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! தமிழ் மேட்ரிமோனி

English summary
Netizens do sharing flood picture and video in Twitter on Chennai rain and Flood.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

X