சீட்டுக்கட்டு போல விழும் சென்னை சில்க்ஸ் கட்டிடம்- பரபர வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை சில்க்ஸ் கட்டடம் இடிக்கப்பட்டபோது, அதன் பெரும்பகுதி அருகிலுள்ள மேம்பாலத்தில் விழுந்தது. இதனை அகற்ற சில நாட்கள் ஆகும் எனத் தெரிகிறது.

சென்னை சில்க்ஸ் துணிக்கடை கடந்த மே 31ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் தீவிபத்துக்குள்ளானது. தொடர்ந்து 30 மணி நேரத்துக்கும் மேலாக கட்டடம் தீப்பற்றி எரிந்ததால், பலவீனமானது. அதனால் அதை இடித்து தரைமட்டமாக்கும் பணி, ஜூன் 2ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது.

 Chennai silks broken pieces spread on the over bridge.

கடந்த ஜூன் 9ஆம் தேதி, கட்டட இடிப்புப் பணியில் ஒருவர் உயிரிழந்ததால் இடிப்புப் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு சில தினங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இன்று கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்ட போது, இடிபாடுகளின் ஒரு பகுதி அப்படியே சரிந்து அருகில் இருந்த மேம்பாலத்தில் விழுந்தது. இதனால் அங்கு பெரும் குவியலாக கற்கள், மண் விழுந்துள்ளது. அதைச் சுத்தம் செய்ய சில நாட்கள் ஆகலாம். தீ விபத்து எற்பட்ட நாளில் இருந்து அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In T.Nagar Chennai, Chennai silks building completely demolished and broken pieces spread on the over bridge.
Please Wait while comments are loading...