புயலோடும் போராட்டம்.. பணமின்றி சென்னை மக்கள் படும் துயரை அன்றே சொன்ன 'அன்பே சிவம்' கமல்!
கமல் ஹாசன் நடித்த அன்பே சிவம் திரைப்பட காட்சி ஒன்று, தற்போதைய சென்னை புயல் காட்சிகளை ஒத்து காணப்படுகிறது என்று சொல்கிறது ஒரு பேஸ்புக் போஸ்ட்.
சென்னை: நடிகர் கமல்ஹாசனை தமிழகத்தின் நாஸ்டர்டாமஸ் என செல்லமாக அழைப்பார்கள் அவரகளது ரசிகர்கள். உலகில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளுடன், கமல்ஹாசனின் பழைய திரைப்படங்களில் இடம்பெற்ற காட்சிகளை ஒப்பிட்டு, "அப்போதே சொன்னார் கமல்" என ரசிகர்கள் புகழ்வதுண்டு.
அதிலும் அன்பேசிவம் திரைப்படம் ஒரு மைல் கல். அப்படத்தில் இருந்துதான் இதுபோன்ற ஏகப்பட்ட காட்சிகளை எடுத்துப்போட்டு அலசுவர் ரசிகர்கள்.

இப்போதும் ஒரு காட்சி சென்னை மக்களுக்கு மிகவும் பொருந்திப்போகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தை கொண்டுவர மோடி அரசு திட்டமிட்டு காய் நகர்த்தும் நிலையில் வர்தா புயல் போன்ற ஒரு இயற்கை சீற்றத்தின்போது டிஜிட்டல் பொருளாதாரம் முழுக்க பலனளிக்கவில்லை. கையில் காசு இல்லாமல், கரண்ட் இன்றி செயல்படாத ஏடிஎம், ஸ்வைப் மெஷின்களை வைத்துக்கொண்டு சென்னைவாசிகள் அல்லோகலப்படுகிறார்கள்.
இதுகுறித்து அன்பேசிவம் படத்தில் இடம் பெற்ற ஒரு காட்சியை பேஸ்புக் போஸ்டாக வெளியிட்டுள்ளார் எம்.எம்.அப்துல்லா என்பவர். அந்த போஸ்ட் பெருவாரியாக ஷேர் செய்யப்பட்டுள்ளது. அதை பாருங்கள்.
"அன்பே சிவம்" படத்தில் ஒரு புயல்மழை சமயத்தில் கமலும், மாதவனும் பயணித்துக்கொண்டு இருப்பார்கள். கை அல்லது பர்ஸ் நிறைய டெபிட்கார்ட் கிரெடிட்கார்ட் வைத்து இருந்தும் அந்த சமயத்தில் மாதவனால் ஒரு டீ கூட வாங்க முடியாது.பேரிடரை உங்கள் முதலாளித்துவ மாடலால் சமாளிக்க முடியாது என்று சொல்லி கமலஹாசன் வாங்கிக் குடுப்பார். இப்போது ஒவ்வொரு சென்னைவாசியும் இதை அனுபவிக்கின்றனர். கேஷ்லெஸ் எகனாமியை அன்றே சொன்ன மஹான்.
இவ்வாறு சொல்கிறது அந்த போஸ்ட்.
புயலால் மின் இணைப்பு கிடைக்காமல் திண்டாடும் சென்னை மக்கள், தங்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவாவது, பழைய ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் பேஸ்புக் போஸ்ட் வலியுறுத்துகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications