நீடிக்கும் காற்றத்தழுத்த தாழ்வு நிலை... சென்னையில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  சென்னையில் மிக கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் வார்னிங்- வீடியோ

  சென்னை: வங்கக்கடலில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னையில் மிக கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளது.

  தாழ்வானப் பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுபாகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னையில் கொட்டித் தீர்த்த மழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

  சென்னையில் மிககனமழை பெய்யும்

  சென்னையில் மிககனமழை பெய்யும்

  இந்நிலையில் சென்னையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

  தமிழக கடலோர பகுதி

  தமிழக கடலோர பகுதி

  தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று வரை அதே இடத்தில் நீடித்தது. இந்நிலையில் அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்று இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளுக்கு இடையே நீடிப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  வடகடலோரங்களில் நீடிக்கும்

  வடகடலோரங்களில் நீடிக்கும்

  இதன்காரணமாக வடகலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது.

  மக்கள் அச்சம்

  மக்கள் அச்சம்

  உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் மீண்டும் மிக கனமழை பெய்யும் என்ற வானிலை நிலைய அறிவிப்பால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai meteorological center says heavy rain will continue in Chennai. Tamil Nadu north coastal districts will get heavy rain in next 24 hours due to low depression in bay of bengal said Chennai meteorological center.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற