நெஞ்சு வலி இல்லை எரிச்சலாம்: விஜயகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்து வரும் சகாப்தம் படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிசியாக உள்ளார். இதனால் படப்பிடிபப்பு நடக்கும் இடங்களுக்கு சென்று வருகிறார்.
இந்நிலையில் கண்ணில் உருத்தல் இருந்து கொண்டே இருந்ததால் அவர் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பிறகு ஊர் திரும்பிய அவர் வழக்கம் போல் படப்பிடிப்பு மற்றும் கட்சி பணிகளை கவனித்து வந்தார்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா செவ்வாய்க்கிழமை ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறித்து தனது கருத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்திற்கு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று செய்திகள் வெளியாகின.
ஆனால் அவர் நெஞ்சுவலிக்காக அல்ல நெஞ்சு எரிச்சலுக்காக இன்று காலை 7 மணி அளவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். அவருக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். இது வழக்கமான பரிசோதனை தான் என்றும், அவர் இன்று மாலைக்குள் வீடு திரும்பிவிடுவார் என்றும் தேமுதிக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications