சிதம்பரம், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கடலூர்: சிதம்பரம், கும்பகோணம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

Chidambaram, Kumbakonam gets heavy rain due to north east monsoon

சென்னையில் நான்கு நாட்களாக வெளுத்து வாங்கிய மழை அதிகாலை முதல் ஓய்ந்துள்ளது. அதேநேரத்தில் தஞ்சாவூடர மாவட்டம் கும்பகோணம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம், புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதோடு சாலைகளிலும் பெருக்கெடுத்து ஓடுகிறது.

விட்டு விட்டு கனமழை பெய்து வருவதால் மக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதியடைந்துள்ளனர். இதனிடையே நவம்பர் 5ஆம் தேதி தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chidambaram, Kumbakonam gets heavy rain due to north east monsoon. Chennai relaxing from the morning.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற