தேனி காட்டுத் தீ: 10 பேரைத் தவிர எஞ்சிய மாணவிகள் பாதுகாப்பாக மீட்பு- முதல்வர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளில் 10 பேரை தவிர்த்து மற்ற அனைவரும் மீட்கப்பட்டுவிட்டனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

தேனி அருகே குரங்கணி காட்டுப் பகுதியில் இன்று காட்டுத் தீ ஏற்பட்டது. கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

CM Edappadi Palanisamy says that 10 girls has to be rescued

இந்தப் பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, ஈரோடு, திருப்பூர் மாணவிகள் வந்துள்ளனர். இதில் ஒரு மாணவி உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் நடைபெற்றன. மீட்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழுக்களும் தயாராக இருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில் மர்ம நபர்களால் இதுபோன்ற காட்டுத் தீ ஏற்படுகிறது. 10 பேர் தவிர்த்து மற்ற அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்.

அந்த 10 பேரையும் பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சென்றுள்ளார்.

வருங்காலத்தில் வனப்பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்றார் முதல்வர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanisamy says that 10 girls has to be rescued in the issue of forest fire in Theni district.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற