இன்னாருக்கு இன்ன பதவி... தீர்மானிக்க இபிஎஸ்: டீல் ஓகேன்னா ஓபிஎஸ்ஸுடன் பேச்சு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர்ந்தால் யாருக்கு முதல்வர் பதவி, யாருக்கு துணை முதல்வர் பதவி என்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்மானித்துவிட்டாராம்.

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற தேர்தல் ஆணையத்திற்கே ரூ. 50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

CM EPS has some conditions for OPS

இந்நிலையில் அதிமுகவின் இரண்டு அணிகளும் சேர பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார். இதையடுத்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று இரண்டு முறை சந்தித்து பேசினார்.

தலைமை செயலகத்தில் முதல்வர் தலைமையில் அமைச்சர்களின் கூட்டமும் நடந்தது. இரு அணிகளும் சேர்வது குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர், துணை முதல்வர் பதவிகள் யாருக்கு, இரு அணிகளில் யார், யாரை அமைச்சராக்குவது என்பது குறித்து பேசி ஒரு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம். அந்த முடிவை ஓ.பி.எஸ். அணி ஏற்றுக் கொண்டால் பேச்சுவார்த்தை நடத்தப்படுமாம்.

இதற்கிடையே அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் சென்னைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edappadi Palanisamy has reportedly decided about certain things and will discuss with OPS about uniting the two groups after the later agrees to his conditions.
Please Wait while comments are loading...