For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ் மொழியை பேணிக்காக்க அனைவரும் பாடுபட வேண்டும்.. முதல்வரின் தாய் மொழி நாள் வாழ்த்து

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களுக்கு தாய் மொழி நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை பேணிக்காக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மக்கள் அறிவியல் மனப்பான்மையுடன் செயற்பட்டதை நமது சங்க இலக்கியங்கள் மூலம் நாம் அறிகிறோம். இச்சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்தை இன்றைய வரையில் நம்மால் வரையறுக்க முடியவில்லை காரணம் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளொடு

முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ்க் குடி என்பதால் உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழியாகவே நம் மொழி இருந்திருக்கிறது. நம் தமிழ் இலக்கியத்தில் அறம் என்னும் சொல் அனைத்து இலக்கியங்களிலும் பயின்று வந்திருப்பதன் மூலம் நம் மொழி அறநெறி மொழி என்றே உலகோர் உரைக்கின்றனர்.

தமிழரின் தொல்குடி சிறப்பு

தமிழரின் தொல்குடி சிறப்பு

தமிழரின் இத்தகு சிறப்புகள் யாவும் தற்போது அகழாய்வுகள் மூலம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது என்று மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. நவலோகம், நவமணிகள், நவபாசானம் இவற்றை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி வந்தவன் தமிழன் என்பதற்கு பற்பலச் சான்றுகள் இன்றும் கிடைத்து வருகின்றன. உலகத்தில் முதன்முதலாக 'மாந்தன் பிறந்தது மறைந்த குமரிக் கண்டமே' என்று மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் நிறுவியதன்மூலம் தமிழரின் தொல்குடி சிறப்பு விளங்குகிறது.

உலக மொழியியல் வல்லுநர்கள் ஆய்வு

உலக மொழியியல் வல்லுநர்கள் ஆய்வு

பதினெண்கீழ்க்கணக்கு பதினெண்மேற்கணக்கு பக்தி இலக்கியங்கள் எல்லாம் தமிழ் மொழியின் சிறப்பையும் பெருமையையும் கூறும் பாங்கு உலக மொழிகளிலேயே தமிழ் மொழியில் மட்டுமே மானிடத்தின் பெருமையை எவ்வித சார்பும் இல்லாமல் உரைத்திருப்பதை நாம் காணலாம். உலகளவில் மனிதன் பேசும் மொழிகளில் உள ரீதியாகவும் உடல் ரீதியாகவும் மாற்றங்களை ஏற்படுத்தும் மொழி தமிழ் மொழியே என்று உலக மொழியியல் வல்லுநர்கள் ஆய்ந்து கண்டறிந்துள்ளனர்.

தமிழுக்காக ஜெ.வின் திட்டங்கள்

தமிழுக்காக ஜெ.வின் திட்டங்கள்

இவ்வாறு பல்வேறு சிறப்பு கூறுகளையும் தன்னேரில்லாக் கட்டமைப்பும் கொண்ட நம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு, சந்தனப் பேழையில் சரித்திரமாய் தமிழகத்தின் அணையா விளக்காய் உறங்கியும் உறங்காமலும் உறங்கிக் கொண்டிருக்கும் ஜெயலலிதா அவர்களின் எண்ணற்ற திட்டங்களைக் கோடிக்காணக்கான ரூபாய் மதிப்பில் தீட்டி செயற்படுத்தியதை உலகத் தமிழர்கள் அறிவார்கள்.

தாய் மொழி நாளுக்கு நிதி

தாய் மொழி நாளுக்கு நிதி

இப்படிப்பட்ட நிலையில் யுனெஸ்கோ என்னும் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளாக பிப்ரவரி 21ஆம் நாளை அறிவித்ததன் வாயிலாக இன்றைக்கு நாமும் ஈராயிரம் ஆண்டுகளாகச் சிறப்புமிக்க தமிழ் மொழியை இந்த நன்னாளிலே போற்றிக் கொண்டிருக்கிறோம்.
இந்த நாளை இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழக அரசின் சார்பில் உலகத் தாய்மொழி நாள் கொண்டாட ஆணையிட்டு ரூபாய் 5 இலட்சம் ஒதுக்கியவர் ஜெயலலிதா ஆவார்.

பாதுகாக்க பாடுபட வேண்டும்

பாதுகாக்க பாடுபட வேண்டும்

உலகத் தாய்மொழி கொண்டாடுகின்ற இந்த வேளையில் நம் மொழியை பேணிப் பாதுகாக்கவும் போற்றி வளர்க்கவும் நாம் ஒவ்வொருவரும் பாடுபடவேண்டும். ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம் தமிழ் மொழி வளர்ச்சிக்குப் பொற்காலமாகும். இதுவரை யாரும் செய்யாத அளவிற்கு தமிழ் வளர்ச்சிக்காக தமிழ்நாடு வரலாற்றில் மாபெரும் சாதனையாக 200 கோடி ரூபாய்க்குமேல் ஒதுக்கி பற்பல திட்டங்களை நிறைவேற்றி வருகிற அரசு மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆசிபெற்ற அரசாகும். எனவே இந்நாளில் அன்னைத் தமிழை அறிவியல் தமிழாக ஆன்மிகத் தமிழாக அறநெறித் தமிழாக வளர்த்தெடுக்க நாம் உறுதியேற்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
Chief minister Edappadi palanisamy greets tamilnadu people for International mother tongue day. He urges all to work to save tamil language.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X