பாய்ந்தது வன்கொடுமை வழக்கு.. பாரதியார் பல்கலை. துணை வேந்தர் கணபதி தலைமறைவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதிக்கு எதிராக போலீஸார் வழக்கு பதிவு செய்ததை அடுத்த அவர் தலைமறைவாகி விட்டார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டுள்ளார் லட்சுமி பிரபாகரன். இவரை அப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக உள்ள கணபதி சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த பெண் வடவள்ளி போலீஸில் புகார் கூறினார்.

Coimbatore Bharathiyar Univ.VC absconded

புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நடத்திய விசாரணையில் துணைவேந்தர் மீதான புகார் உறுதியானது.

இதையடுத்து அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கணபதி தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Coimbatore Bharathiyar Univeristy Vice Chancellor Ganapathi absconded after police filed case against him.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற