ரஜினிகாந்த் கட்சி + காங்கிரஸ்; சி.எம். வேட்பாளராக ப.சிதம்பரம்... ப்ளானை போட்டுடைத்த கராத்தே

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினிகாந்தின் தனிக் கட்சி முடிவுக்குப் பின்ன ப.சிதம்பரம்தான் இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் கராத்தே தியாகரஜன் இந்த விஷயங்களை போட்டுடைத்துவிட்டார்.

சென்னையில் இன்று திடீரென முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீடு மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்பாக சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அதில், ரஜினிகாந்த் தனிக் கட்சி தொடங்கும் முடிவுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டல் இது என்றார். அத்துடன் சிதம்பரம் முதலமைச்சர் வேட்பாளராக உருவாகி வரும் தருணத்தில் அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துகிறது மத்திய அரசு எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கராத்தேவின் பேட்டி

கராத்தேவின் பேட்டி

கராத்தே தியாகராஜன் இப்படி மொட்டையாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ரஜினிகாந்த் பாஜகவில் சேரக் கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில் அவருக்கு நெருக்கமான கராத்தே தியாகராஜன் தனிக்கட்சி பற்றி பேசுகிறார்.

எப்படி சிதம்பரம் சி.எம். வேட்பாளராவார்?

எப்படி சிதம்பரம் சி.எம். வேட்பாளராவார்?

அத்துடன் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ள நிலையில் சிதம்பரம் எப்படி முதல்வர் வேட்பாளராக முடியும்? என்ற கேள்விகள் எழுந்தன. கராத்தே தியாகராஜனின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

காங்கிரஸும் தீவிரம்

காங்கிரஸும் தீவிரம்

இது தொடர்பாக நாம் விசாரித்ததில், தமிழகத்தில் பாஜக எப்படி காலூன்ற திட்டமிட்டு வருகிறதோ அதேபோல காங்கிரஸும் இழந்த ஆட்சியை மீண்டும் பெற வியூகம் வகுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாக ஜூலை மாதத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக சிதம்பரம் பொறுப்பேற்க உள்ளார்.

இதுதான் வியூகமாம்

இதுதான் வியூகமாம்

அத்துடன் நடிகர் ரஜினிகாந்தை தனிக்கட்சி தொடங்க வைத்து காங்கிரஸ் பிளஸ் ரஜினிகாந்த் கூட்டணி ஒன்றை உருவாக்கவும் அந்த அணியின் முதல்வர் வேட்பாளராக ப.சிதம்பரத்தை முன்னிறுத்தவும் வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாம். இதன் உச்சகட்டமாகத்தான் ரஜினிகாந்த் தமது அரசியல் பிரவேசத்தை கோடிட்டு காட்டியிருந்த மறுநாளே ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு ரெய்டு போனது.

கராத்தே போட்டுடைத்தார்

கராத்தே போட்டுடைத்தார்

இதைத்தான் கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்தின் தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு விடுக்கப்பட்ட மிரட்டல் என குறிப்பிட்டிருக்கிறார். அத்துடன் மேலோட்டமாக சிதம்பரம் முதல்வர் வேட்பாளராக உருவாகி வருவதையும் கோடிட்டு காட்டியிருக்கிறார். இது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Senior Congress leader Karate Thiyagarajan's statement exposes his party is backing that Rajinikanth's planning to the new political party.
Please Wait while comments are loading...