சமையல் கேஸ் விலை உயர போகிறதா.. திணறடிக்கும் சிலிண்டர் "தட்டுப்பாடுகள்".. அறிவிப்பு வெளியாகுதா?
சென்னை: சிலிண்டர் விலை மேலும், விலை உயரக்கூடிய அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இதற்கு என்ன காரணம்?
சர்வதேச சந்தையில் கச்சா விலையின் ஏற்ற இறக்கத்தின் அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
மாதம் இருமுறை:
பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் தினசரி மாற்றி வருகின்ற நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மாதத்திற்கு இரு முறை மாற்றி அமைக்கப்படுகின்றன.

அந்தவகையில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை கடந்த சில மாதங்களில் உயர்ந்து வந்தது. பிறகு, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டு உபயோக கேஸ் உயர்த்தாமல் ஒரே விலையிலேயே தொடர்ந்து நீடித்து வந்தது.
சமையல் கேஸ்:
இதற்கு பிறகு, 3 மாநில தேர்தல் முடிவடைந்த நிலையில், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து ரூ.2268 விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.1118.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இப்போதுவரை சிலிண்டர் விலை உயர்வு குறித்த விவாதங்கள் சோஷியல் மீடியாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.. இந்நிலையில், மேலும், விலை உயரும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் சிலிண்டர் விலை குறித்து அறிவிப்பு வெளியாவதுபோல், இந்த மே மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலை அறிவிக்கப்பட்டது. வணிக சிலிண்டருக்கான விலை அதிக அளவில் உயர்ந்துள்ள நிலையில், வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் இருந்தது.
கள்ள சந்தை:
இதனால் ஹோட்டல் போன்ற வணிக தளங்களில் கள்ள சந்தையின் மூலம் வீட்டு சிலிண்டர்களை பெற்று அதை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனராம்... இப்போது, வீட்டு சிலிண்டர் விலை, 1,118.50 ரூபாயாகவும்; வணிக சிலிண்டர் விலை 2,023 ரூபாயாகவும் உள்ளதால் இதன்மூலம் ரூ.1,000 க்கும் அதிகமாக லாபம் கிடைக்கிறது...
இதுபோன்ற செயல்பாடுகளினாலேயே, வீட்டு உபயோக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என்கிறார்கள்.. இதனைத்தொடர்ந்து வீட்டு சிலிண்டர்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி கவலையை உண்டுபண்ணி வருகின்றன. அந்தவகையில், ஜுன் மாத துவக்கத்தில், வீட்டு சிலிண்டர் விலை அறிவிப்பு எப்படி வரப்போகிறதோ? என்ற கலக்கமும் இப்போதே சூழ்ந்து கொண்டுள்ளது.
-
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
வாடகை வீட்டில்.. பழுதுபார்ப்பு செலவு யாருடைய பொறுப்பு? தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications