For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அ.தி.மு.க.-இ.கம்யூனிஸ்ட் கூட்டணியை உடைக்கப் பார்க்கிறார்கள் சொல்கிறார் தா.பா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

திருவாரூர்: அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிரிப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

திருவாரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தா.பாண்டியன், கூறியதாவது:

லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுபவர்கள் விருப்பமனு அளிக்கலாம் என அறிவித்து இருந்தாலும், நிச்சயமாக கூட்டணி கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு குறித்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்துவார்.

CPI to go with ADMK in LS poll says Tha Pandian

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியை பிரிப்பதற்கு பலர் முயற்சிக்கின்றனர். அ.தி.மு.க.வுடனான இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி உடையாது. கூட்டணி தொடரும்.

தமிழகத்தில் நிலவும் மின்சார நெருக்கடிக்கு மத்திய அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மின்வழித்தடங்களை அமைக்கும் பணியை மத்திய அரசு முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். அப்படி செய்யாததால்தான் தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
டெல்லி மாநில தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு ஒரு எச்சரிக்கை என்றும் தா.பாண்டியன் கூறினார்.

English summary
CPI wlll have alliance with ADMK in coming LS polls says party secretary Tha Pandian
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X