For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேய்க்காற்று கனமழையுடன் சென்னையில் 7 மணிநேரம் கோரத்தாண்டவமாடிய வர்தா புயல்!

By Mathi
Google Oneindia Tamil News

-வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிடுகிறார் முதல்வர் ஓபிஎஸ்

-சென்னையில் புயல் காரணமாக நிறுத்தப்பட்ட வெளியூர் பேருந்து சேவை தொடக்கம்

-இரவு 7 மணி முதல் வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன

-இரவு 6.51: வர்தா புயல் பாதிப்பில் இருந்து தமிழக மக்கள் மீண்டு வருவர்- சோனியா

-இரவு 6.44: வர்தா புயல் கரையை கடந்த போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது

-இரவு 6.34: சென்னை அருகே அதிதீவிர வர்தா புயல் கரையை கடந்து வழுவிழந்தது

-புயலின் கிழக்குப் பகுதி சென்னை அருகே முழுமையாக கரையை கடந்தது

-சென்னையில் காற்றின் வேகமும் மழையும் குறையும்

-சென்னையில் மழை படிப்படியாக குறையும்

-ஒருசில இடங்களில் கனமழை நீடிக்கும்ன்

-அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் கனமழை

-காற்றின் வேகம் படிப்படியாக மணிக்கு 60 கி.மீ. வேகமாக குறையும்

-இரவு 6.25 மணி: வர்தா புயலால் சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

-சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர் பேருந்துகள் இயக்கப்படவில்லை

-இரவு 6.15: சென்னையில் நுங்கம்பாக்கத்தில் 2 அரசு பேருந்துகள் மீது மரம் விழுந்தது

-மாலை 5.42: சென்னை மீனம்பாக்கம் 18 செ.மீ; செம்பரம்பாக்கம் 16 செ.மீ மழை

-சென்னை நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ. மழை

-மாலை 5.19: சென்னை விமான நிலையம் இரவு 8 மணிவரை மூடல்

-சென்னை விமான நிலையத்தில் சேதங்களை சரி செய்யும் பணி தொடருகிறது

-மாலை 5.14: முதல்வர் ஓபிஎஸ்ஸிடம் புயல் நிலவரம் கேட்டறிந்தார் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

-அரசு இயந்திரம் முழு வீச்சில் செயல்படுகிறது- ராஜ்நாத்சிங்கிடம் முதல்வர் ஓபிஎஸ்

-மாலை 5 மணி: சென்னையில் மீட்பு பணியில் களமிறங்கியது ராணுவம்

-அதிதீவிர புயல் வர்தாவின் மையம் இன்று 3.30மணிக்கு சென்னை துறைமுகம் அருகே கடந்தது

-புயலின் கிழக்குப் பகுதி இரவு 6.30 மணிவரை கடக்கும்

-மாலை 5.03: வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்து முடிந்தது

-வர்தா புயலின் கிழக்கு பகுதி கரையை கடந்து கொண்டிருக்கிறது

-மணிக்கு 70 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும்- பாலச்சந்திரன்

-ஸ்ரீஹரிகோட்டம்- மரக்காணம் வரை காற்றின் வேகம் இருக்கும்

-மிதமான மழை தொடர்ந்து நீடிக்கும்

-மாலை 4.58: புயலால் சென்னையில் காற்றின் வேகம் மீண்டும் அதிகரிப்பு

-மாலை4.35: சென்னை, திருவள்ளூர், காஞ்சி மக்களுக்கு முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள்

-போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகள்- முதல்வர் ஓபிஸ்

-வர்தா புயல் கரையை கடப்பதால் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம்

-இரவு 7 மணிக்கு பின்பும் கனமழை நீடிக்கும் என்பதால் வெளியே வர வேண்டாம்

Cyclone Vardha Storm likely to cross near Chennai by afternoon

-புயல் பாதிப்புகளை உடனே சீர் செய்ய உத்தரவு- முதல்வர் ஓபிஎஸ்

-மின்சாரம், குடிநீர் பிரச்சனைக்கு அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்

-மாலை 4.26: மின்கம்பங்கள் மீது விழுந்த 3,000 மரங்கள் அகற்றம்- தங்கமணி

-வர்தா புயலால் 3,000 மின்கம்பங்கள் சேதம்- மின் துறை அமைச்சர் தங்கமணி

-போர்க்கால அடிப்படையில் மின்கம்பங்கள் அமைக்கப்படும்

-வெளிமாவட்டங்களில் இருந்து 2,000 பேர் கொண்டுவரப்பட்டுள்ளனர்

-சென்னை நகருக்கு இரவுக்குள் மின்சாரம் கொடுக்க முயற்சி

-மாலை 4.18: திருவள்ளூர் அருகே பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையை கடந்தது

-மாலை 4.08 மணி: பழவேற்காட்டில் வர்தா புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கிறது

-மாலை 4.08 மணி: பொதுமக்கள் மாலை 6 மணிவரை வீட்டை விட்டு வெளியேற வர வேண்டாம்

-மாலை 3.45: சென்னையில் இன்னும் 3 மணிநேரம் கனமழை நீடிக்கும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

-மாலை 3.45 மணி: சென்னையில் இருந்து 6கிமீ தொலைவில் வர்தா புயலின் மையப்பகுதி

-மாலை 3.45 மணி: வர்தா புயலின் மையப்பகுதி இன்னும் 15 நிமிடங்களில் முழுமையாக கரையை கடக்கும்

-வர்தா புயல் பாதிப்பால் சென்னை விமான நிலையம் மாலை 6 மணிவரை மூடல்

-இன்னும் 2 மணிநேரத்தில் வர்தா புயல் முழுவதுமாக கரையை கடக்கும்

-சென்னையில் மணிக்கு 192 கி.மீ வேகத்தில் கடுமையாக காற்று வீசியது- இந்திய வானிலை மையம்

-தற்போது மணிக்கு 100- 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது- இந்திய வானிலை மையம்

-டெல்லி வானிலை மைய ஆய்வு அதிகாரி மஹபத்ரா தகவல்

-சென்னையில் தற்போது மணிக்கு 192 கி.மீ வேகத்தில் கடுமையாக காற்று வீசுகிறது- இந்திய வானிலை மையம்

-அதிதீவிர வர்தாவின் மேற்குப் பகுதி கரையை கடந்துவிட்டது

-3 மணி முதல் 4 மணிவரை மையப் பகுதி கரையை கடந்து வருகிறது

-புயலானது சென்னைக்கு வடக்கே 10 கி.மீ தூரத்தில் கரையை கடக்கிறது

-4 மணி முதல் 7 மணி வரை புயலின் கிழக்கு பகுதி கரையை கடக்கும்

-5.30 மணியளவில் அதிதீவிரம், தீவிர நிலையில் இருந்து புயலாக குறையும்

-இரவு 11.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக குறையும்

-பகல் 3.01 மணி: வர்தா புயல் காரணமாக 2 பேர் பலி- தமிழக அரசு

-பகல் 3. 00 மணி: வர்தா புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கத் தொடங்கிவிட்டது- வானிலை ஆய்வு மையம்

-3.00 மணி: புயல் காற்றின் வேகம் சற்றே தணியத் தொடங்கியுள்ளது

-பகல் 3.00 மணி: புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகம், ஆந்திராவுக்கு மத்திய அரசு உதவ தயார்

-பகல் 2.45 மணி: வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்

-பகல் 2.45: வர்தா புயல் காரணமாக 17 ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே

-பெங்களூர், மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு நகரங்கள்-சென்னை நடுவேயான ரயில்கள் ரத்து

-சென்னைக்கு அருகே 2 கடற்படை கப்பல்கள் மீட்புப் பணிக்காக தயார்

-சிவாலிக், காட்மட் என்ற கடற்படை கப்பல்கள் சென்னைக்கு அருகில் நிறுத்தப்பட்டுள்ளன

-சென்னையில் 30 படகுகளுடன் கடற்படை வீரர்கள் மீட்புக் குழுவினர் தயார்

-பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் 7 ராணுவ குழுவினர் உள்ளனர்

-பகல் 2.11 மணி: திருப்பதி விமான நிலையமும் மூடப்பட்டது

-பகல் 2.08: கரையை கடக்கத் தொடங்கியது "வர்தா" புயல்

-பகல் 2.08: பல்லவன் எக்ஸ்பிரஸ் உட்பட 17 ரயில்கள் ரத்து

-பகல் 2.05 மணி: வர்தா புயலின் மையப்பகுதி 3.30 மணிக்கு கரையை கடக்கும்

-பகல் 2.00 மணி: மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை வர்தா புயல் கரையை கடக்கும்

-பகல் 1.55: சென்னை விமான நிலையம் பகல் 3 மணி வரை மூடல்

-பகல் 1.55: தமிழக அரசுக்கு மத்திய அரசு நீர்வளத்துறை அறிவுறுத்தல்

-பகல் 1.55: தமிழக ஏரிகளின் நீர்வரத்தை கண்காணிக்க மத்திய அரசு அறிவுத்தல்

-பகல் 1.50 மணி: சென்னையில் மணிக்கு 108 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது

-வர்தா புயல் தாக்குதல் - இருளில் மூழ்கியது சென்னை மாநகரம்

-வர்தா புயலின் விட்டம் 90 முதல் 100 கிலோ மீட்டர் ஆக காணப்படுகிறது - வானிலை மையம்

-மரக்காணம் முதல் பழவேற்காடு வரை புயலின் விட்டம் பரந்துள்ளது - வானிலை மையம்

-பகல் 1.30 மணி: வர்தா புயலின் தாக்கம் இரவு 7 மணி வரை நீடிக்கும்- வானிலை மையம்

-பகல் 1.21: சென்னையில் 100 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று

-வர்தா புயலின் தாக்கம் மாலை 6 மணி வரை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்

-சென்னையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது

-இன்னும் ஒரு மணிநேரத்தில் சென்னையை கடக்கிறது வர்தா புயலின் மையப்பகுதி

-சென்னைவாசிகள் பிற்பகல் 1 முதல் மாலை 4 மணிவரை வெளியே வர வேண்டாம்- தமிழக அரசு

-வெளியே சென்றவர்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டுகோள்

-சென்னை, புறநகர்களில் 1,000 மரங்கள் வேரோடு சாய்ந்தன

-பேருந்துகளின் கண்ணாடிகளை நொறுக்குகிறது வர்தா புயல்

-காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை

-மரங்கள், மின்கம்பங்கள், விளம்பர பலகைகள் கீழே விழுந்து சேதம்

-சென்னை நகரின் பல இடங்களில் கடும் சேதம்

-சென்னை நகரை சிதைத்து சின்னாபின்னமாக்குகிறது வர்தா புயல்

-சென்னையில் தற்போது 130கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று

-சென்னையில் பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்தன

-சென்னையில் முன்னெச்சரிக்கையாக மின்விநியோகம் நிறுத்தம்

-வர்தா புயலால் மரங்கள் பேயாட்டம் போடுகின்றன

-வர்தா புயலால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்தன

-வர்தா புயலால் ஹைகோர்ட் வளாகம் வெறிச்சோடியது - நீதிமன்ற அலுவல்கள் முடங்கின

-அதிதீவிர புயல் வர்தா தற்போது சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது

-காற்றின் வேகம் 120- 130 கி.மீ வேகத்தில் வீசுகிறது

-அதிகபட்சமாக 140 கி.மீ வேகத்திலும் காற்று வீசுகிறது

-காஞ்சி சுற்றுவட்டாரங்களில் கனமழை

-11.30 மணிநிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ.தொலைவில் வர்தா புயல்

-சென்னை வரும் பல ரயில்கள் பாதி வழியிலேயே நிறுத்தம்

-தண்டவாளங்களில் மரங்கள் விழுவதால் ரயில்கள் ஆங்காகே நிறுத்தம்

-கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்

-வர்தா புயலால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 12 மரங்கள் முறிந்தன

-வர்தா புயலால் ஹைகோர்ட் வளாகம் வெறிச்சோடியது - நீதிமன்ற அலுவல்கள் முடங்கின

-சென்னையில் இருந்து 47 கி.மீ.தொலைவில் வர்தா புயல்

-சென்னையில் 133 இடங்களில் மரங்கள் விழுந்தன

-சாலையில் விழுந்த 63 மரங்கள் அகற்றம்- மாநகராட்சி

-இன்னும் 2 மணிநேரத்தில் சென்னையை தாக்குகிறது வர்தா புயல்

-திருவொற்றியூரில் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள், வீட்டின் மாடியில் உள்ள சின்டெக்ஸ் வாட்டர் டேங்குகள் பறந்தன

-வர்தா புயலில் தாக்கதால் சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

-இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் கீழே விழுந்து காயம்

-வாகன ஓட்டிகள் 36 பேர் வரை காயமடைந்துள்ளதாக தகவல்

-சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் 113 ஆம்புலன்ஸ் வேன்கள் ரெடி

-சென்னையில் 100 கி.மீ வேகத்தில் வீசும் புயல் காற்று - 36 பேர் காயம்

-சென்னையில் அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுவிட்டன

-மறு உத்தரவு வரும் வரை புறநகர் ரயில்கள் இயக்கம் இல்லை

-அடுத்த 12 மணிநேரத்துக்கு சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் கனமழை

-புயல் கரையை கடந்த பின்னரும் காற்றும் கன மழையும் நீடிக்கும்

-6 மணி நேரத்தில் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது- பாலச்சந்திரன்

-உள்மாவட்டங்களில் 50 முதல் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

-கடல் அலைகள் இயல்பை விட 1மீட்டருக்கு அதிகமாக இருக்கும்

-மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்

-பொதுமக்கள் அரசு, தேசிய பேரிடர் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்

-தென்மேற்கு வங்கக் கடலில் அதிதீவிர புயல் வர்தா

-காலை 9 மணிநிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 87 கி.மீ தொலைவில் மையம்

-சென்னைக்கு அருகே பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்கு கரையை கடக்கும்

-மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்

-பிற்பகல் 2 மணி முதல் 5 மணிக்கு காற்றின் வேகம் சற்று குறையும்- பிறகு கூடும்

-காற்றின் வேகம் குறைந்தாலும் புயல் கரையை கடந்ததாக கருத கூடாது

-வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர் சந்திப்பு

-சென்னை சாந்தோம் முதல் தலைமை செயலகம் வரை 25 மரங்கள் விழுந்தன

-சென்னையில் ரயில் பாதைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

-சென்னைக்கு வடக்கே புயல் தாக்கும்- வானிலை ஆய்வு மையம்

-சென்னையில் தற்போது 75 கி.மீ. வேகத்தில் காற்றுவீசுகிறது

-வர்தா கரையை நெருங்க நெருங்க சென்னையில் காற்றின் வேகமும் அதிகரிக்கிறது

-சென்னையில் 52 மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு

-சென்னையில் தற்போது 67 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது

-வர்தா புயல் கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள் அறிவிப்பு

-உதவி எண்கள்: 044 - 2561 9206, 2561 9511, 2538 4965, 2538 3694, 2536 7823, 2538 7570

-சென்னை விமான நிலைய ஓடுபாதை மூடப்படுகிறது

-சென்னை அண்ணாசாலை, வால்டாக்ஸ் சாலைகள் மரங்கள் விழுந்தன

-சாலையில் விழும் மரங்கள் உடனுக்குடன் அகற்றப்படுகின்றன

-சென்னைக்கு கிழக்கே 50 கி.மீ. தொலைவில் வர்தா புயல் மையம்

-பழவேற்காடு- ஸ்ரீஹரிகோட்டா இடையே பிற்பகல் 2 மணி முதல் 3 மணிக்குள் வர்தா புயல் கரையை கடக்கும்

-சென்னைக்கு வரும் ரயில்கள் வேறு மார்க்கங்களில் திருப்பிவிடப்பட்டன

-தாழ்வான பகுதிகளில் இருந்து 4622 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

-சென்னை திருவொற்றியூரில் வீட்டு சுவர் இடிந்து 2 பேர் காயம்

-பேசின்பிரிட்ஜ், மணலி, தாம்பரம், மகாபலிபுரம், புதுவையில் பேரிடர் மீட்பு குழு முகாம்

-சென்னை கடற்கரை- வேளச்சேரி புறநகர் ரயில் போக்குவரத்தும் ரத்து

-சென்னை- கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில்கள் ரத்து

-சென்னையில் 25 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன

-சென்னையில் 9 விமானங்கள் தாமதம்- 5 விமான சேவைகள் ரத்து

-திருவள்ளூர், பழவேற்காடு பகுதிகளில் பலத்த காற்று வீசுகிறது

-சென்னை நேப்பியார் பாலம் அருகே மரம் விழுந்தது- போக்குவரத்து மாற்றம்

-சென்னையில் சாலைகள் வெறிச்சோடின

-சென்னை பேருந்துகளில் மக்கள் கூட்டம் இல்லை

-சென்னையில் பலத்த காற்று வீசுகிறது

-கடற்கரை சாலையில் வாகனங்களை ஓட்ட முடியாமல் அவதி

-பலத்த காற்று வீசுவதால் விமானங்கள் ரத்து

-விமானங்கள் அருகே உள்ள விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்படுகின்றன

-சென்னையை நெருங்குகிறது வர்தா புயல்

-சென்னைக்கு கிழக்கே 100 கி.மீ தொலைவில் வர்தா புயல்

-சென்னையை நோக்கி 13 கி.மீ வேகத்தில் நகருகிறது வர்தா புயல்

-சென்னையில் கரையை கடக்கும்போது 100 முதல் 110 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும்

-சென்னையில் பேய் காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது

-சென்னை கோட்டூர்புரத்தில் மரம் முறிந்து விழுந்தது- 2 பேர் படுகாயம்

-வர்தா புயல் பழவேற்காடு - கும்மிடிப்பூண்டி இடையே கரையை கடக்கும் - வானிலை மையம்

-கடல் அலைகள் அதிக சீற்றத்துடன் எழுவதால் மீனவர்கள் அச்சம்

-கடற்கரை அருகே வசிப்பவர்கள் அவசரமாக வெளியேற்றம்

-சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 3,500 பேர் இடமாற்றம்

-24 மணிநேரத்தில் சென்னையில் 6 செ.மீ மழை

-சென்னைக்கு கிழக்கே 142 கி.மீ. தொலைவில் வர்தா புயல்

-வர்தா புயலால் பழவேற்காட்டில் பலத்த கடல் காற்று வீசி வருகிறது

-பலத்த காற்றால் பழவேற்காட்டில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தன

-பழவேற்காட்டில் சூறைக்காற்று வீசி வருவதால் கம்பிகள் அறுப்பட்டு மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன

English summary
Cyclone Vardha Storm likely to cross near Chennai by afternoon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X