தீபங்கள் ஒளிரும் தீபாவளி... தந்தேரேஸ் தொடங்கி யம துவிதியை வரை ஐந்து நாள் கொண்டாட்டம்
தீபாவளித் திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று பாகவத புராணம் சொல்கிறது. தந்தேரஸ் தொடங்கி யம துவிதியை வரை 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
Recommended Video

சென்னை: தீயவை அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து பரவி பிரகாசித்து நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி பண்டிகை வட இந்தியாவில் 5 நாட்கள் கொண்டாடப்படுகிறது.
ஆசியாவிலேயே மிக அதிகமானோர் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தீபாவளி என்றாலே விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும். இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்கள், பௌத்தர்கள், சீக்கியர்களும் இந்தப் பண்டிகையை கொண்டாடி மகிழ்கிறார்கள்.
தீபாவளித் திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்பட வேண்டும் என்று பாகவத புராணம் சொல்கிறது.தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது.

தங்கம் வாங்கும் நாள்
தந்தேரஸ் என அழைக்கப்படும் முதல் நாள் வீட்டிற்கு உலோகங்கள் வாங்கும் நாளாகக் கருதப்படுகிறது. தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது இந்த நாளில்தான் தன்வந்திரி அமிர்த கலசத்துடன் தோன்றினார். அதோடு, செல்வத்துக்கு அதிபதியான அன்னை மகாலட்சுமி அவதரித்த தினமும் இதுதான். அதனால் இந்த திரயோதசி நாள் "தன்' அதாவது செல்வம் வளம் சேர்க்கும் நாளாக கருதப்படுகிறது.

மகாலட்சுமிக்கு பூஜை
தந்தேரஸ் நாளில் தங்கம் அல்லது வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வ வளம் என்றும் நிலைத்து நிற்கும் என புராணங்கள் கூறுகின்றன. பொதுமக்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி தங்க நகை முதல் வெள்ளி மற்றும் எவர்சில்வர் பாத்திரங்கள் வரை வாங்குகிறார்கள். இதை மாலை வீட்டில் வைத்து மகாலஷ்மி பூஜை செய்து மகிழ்கிறார்கள்.

தமிழகத்தில் தீபாவளி
தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நரக சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர். அதே நேரத்தில் வட இந்தியாவில் சின்ன தீபாவளி எனப்படுகிறது. இந்த நாளில், மாலையில் மகாலட்சுமி தங்கள் வீட்டிற்குள் நுழைவார் என்பது ஐதீகம் ஆகும். இதற்காக லஷ்மியை வரவேற்க அவர்கள் தங்கள் வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து வரவேற்பார்கள்.

புத்தாடை,பட்டாசு
வட மாநிலங்களில் இந்நாளே பெரிய தீபாவளி என்ற அழைக்கப்படுகிறது. புத்தாடை உடுத்தி தம் வீட்டிற்கு வந்து விட்டதாகக் கருதும் லஷ்மிக்கு மாலையில் பூஜை செய்வார்கள். பட்டாசுகளையும் வெடிப்பார்கள். பிறகு தம் உறவுகள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு சென்று வாழ்த்து கூறி மகிழ்கிறார்கள். இலங்கையில் ராவணனை வென்று சீதாபிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாளாக கருதப்படுகிறது.

ஸ்ரீ ராமருக்கு வரவேற்பு
அயோத்தில் ராமரின் பாதுகையை வைத்து ஆண்ட பரதன், ஸ்ரீராமருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வீடு தோறும் விளக்கேற்றி வைக்கச் செய்தார். அந்த ஒளியில் அயோத்தி மாநகரமே சொர்க்கம் போல மின்னியதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.

கடைகளில் புதுக்கணக்கு
நான்காவது தினத்தன்று‘கோவர்தன் பூஜை'செய்யும் நாளாகும். இதில், அனைவரும் பசு மற்றும் காளை மாடுகளை குளிப்பாட்டி பூஜை செய்து மகிழ்வார்கள். இத்துடன் நிறுவனங்களின் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளும் தம் அலுவலகங்கள் மற்றும் கடைகளில் பூஜை போட்டு புதுக்கணக்கு துவங்குவார்கள். இந்த நாளை உபி மற்றும் உத்தராஞ்சல் மாநிலங்களில் ராமர் பெயரில் கொண்டாடுவதும் வழக்கம். இந்த நாளின் போது பகவான் கிருஷ்ணருக்கு பூஜை செய்து, அவருக்கு பிடித்த பால், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை நிவேதனம் செய்கின்றனர். அவ்வாறு செய்தால் வீட்டில் அருள் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம்.

சகோதரர்களுக்கு விருந்து
கடைசியாக ஐந்தாவது நாள் ‘பைய்யா தோஜ்' என்பது ஆகும். தமிழகத்தில் யமதுவிதியையாக கொண்டாடப்படுகிறது. அன்று தான் யமன் தன்னுடைய சகோதரியான யமுனாவை காண பூலோகத்திற்குவந்தார். யமுனை அவனை வரவேற்கு பல வித இனிப்பு பலகாரங்களையும், அன்னங்களையும் படைத்து அவரை உண்ணச் செய்தாள். இதனால் மிகவும் மனம் மகிழ்ந்த யமன் நீ எனக்கு உபசாரம் செய்த இந்த நாளில் எந்த சகோதரி தன்னுடன் பிறந்தவனுக்கு விருந்து வைத்து அவன் மனம் குளிரும் விதம் செய்கிறாளோ அவளுக்கு சர்வ மங்களமும் கிட்டும் அவளுடைய தாலி பாக்கியம் நீடித்து இருக்கும் என்று வரம் அருளினார்.

சகோதரர்களின் ஆசி கிடைக்கும்
இன்றும் வடமாநிலங்களில் யம துவிதியை அன்று தங்களுடைய சகோதரர்களை வீட்டு அழைத்து புது உடைகள் அளித்து, அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்கள் செய்து உபசரிக்கிறார்கள். இதனால் தங்களுக்கு சகல சௌபாக்கியமும் கிட்டும் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த கொண்டாட்டத்திற்காகவே வட மாநிலங்களின் பெரும்பாலான அரசுகள் மூன்று நாட்கள் வரை அரசு விடுமுறையாக அறிவிக்கின்றன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications