For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி பர்ஸ்ட்... ஸ்டாலின் லாஸ்ட்... ஜெ.யின் அவதூறு வழக்கு வேட்டையில்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆளும் அதிமுக அரசின் சார்பில் கடந்த 5 ஆண்டு காலத்தில் சென்னையில் மட்டும் எதிர்க்கட்சிகள் மீது 149 அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், முரசொலி நாளேடு, ஜூனியர் விகடன் குழும இதழ்கள் ஆகியவற்றின் மீது முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் சார்பில் ஏராளமான அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன. இந்த அவதூறு வழக்குகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜயகாந்த் வழக்கும் தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம், தமிழக அரசுக்கு கடும் கண்டனமும் தெரிவித்திருந்தது.

கண்டனம்...

கண்டனம்...

"தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அவதூறு வழக்குகள் அதிகமாக தொடரப்படுகின்றன? அரசுக்கு எதிராக விமர்சனம் செய்வதுதான் எதிர்கட்சிகள் பணி. இப்படி விமர்சனம் செய்வதற்கு எல்லாம் அவதூறு வழக்குகள் தொடர்வதா? அரசு எந்திரம் சரியாக இயங்காததாலேயே விமர்சனங்கள் எழுகின்றன என நீதிபதிகள் கண்டித்திருந்தனர்.

விஜயகாந்த் மீது...

விஜயகாந்த் மீது...

அத்துடன் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு விசாரணைகளுக்கும் உச்சநீதிமன்றம் தடையை நீட்டித்திருந்தது. இந்நிலையில் சென்னை வெள்ளம் தொடர்பாக விமர்சனம் செய்தததாக விஜயகாந்த் மீது நேற்று மேலும் ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சென்னை வெள்ளம்...

சென்னை வெள்ளம்...

இதேபோல் அமைச்சர் உதயகுமார் சார்பில் திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி மீதும் சென்னை வெள்ளம் குறித்து அவதூறான செய்தி வெளியிட்டதாக ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும்...

சென்னையில் மட்டும்...

இந்நிலையில், சென்னையில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எத்தனை அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சென்னையில் மட்டும் 149 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாம்.

கருணாநிதி தான் டாப்...

கருணாநிதி தான் டாப்...

இவற்றில் திமுக தலைவர் கருணாநிதி மீது அதிகபட்சமாக 16 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்தப்படியாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது 8 வழக்குகளும், பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன் ஆகியோர் மீது தலா 5 வழக்குகளும் போடப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் 4 வழக்குகளுடன் ஸ்டாலின் கடைசி இடத்தில் உள்ளார்.

முரசொலி...

முரசொலி...

இதேபோல், பத்திரிக்கைகளில் முரசொலி மீது அதிகபட்சமாக 19 வழக்குகள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The DMK president karunanidhi is the top person to face defamation case filed by Jayalalitha and supporters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X