எம்.ஆர். விஜயபாஸ்கர் நீக்கம்.. தினகரன் கொடும்பாவியை எரித்து போராட்டம்.. கரூரில் பரபரப்பு.. வீடியோ
கரூர் அதிமுக மாவட்ட செயலாளராக எம்.ஆர். விஜயபாஸ்கரை தினகரன் நீக்கியதைத் தொடர்ந்து அவரது உருவபொம்மையை எரித்து, எதிர்ப்பு கோஷ்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர்: கரூர் மாவட்ட செயலாளர் நீக்கப்பட்டதைக் கண்டித்து தினகரன் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு கோஷ்டியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததையடுத்து தினகரன் தரப்பு கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கொடுத்த வாபஸ் பெற்றதாக அறிவித்தனர். பின்னர், அவர்கள் அனைவரும் புதுச்சேரியில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி, முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அவர்கள் கோரி வருகின்றனர்.

அதனையொட்டி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் கட்சி பொறுப்புகளில் அமர வைக்கப்பட்டவர்களை நீக்கி வருகிறார் தினகரன். போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வருகிறார். அப்பதவியிலிருந்து அவரை நீக்கியதாகத் தினகரன் நேற்று அறிவித்தார். மேலும், கரூர் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நியமிப்பதாக அவர் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால், அவர்கள் தினகரனின் கொடும்பாவியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
-
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல்












Click it and Unblock the Notifications