ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இல்லை.. சசியை சந்தித்த தினகரன் பேட்டி

Posted By:
Subscribe to Oneindia Tamil
  ஜெ.,மரணம்-தினகரன் பேட்டி- வீடியோ

  பெங்களூர்: ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை என்றும் வீடியோவை வெளியிட்டதற்கு ஜெ.வின் ஆன்மா வெற்றிவேலை மன்னிக்கும் என்றும் தினகரன் கூறினார்.

  ஜெயலலிதா கடந்த ஆண்டு காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைபாடு காரணமாக செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது புகைப்படமோ வீடியோவோ தமிழக மக்களுக்காக வெளியிடப்படவில்லை.

  இந்நிலையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு, டிசம்பர் 5-ஆம் தேதி அவர் உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது.

  ஆர்கே நகர் இடைத்தேர்தல்

  ஆர்கே நகர் இடைத்தேர்தல்

  இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி, அதாவது இடைத்தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்னர், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை எடுத்த போது எடுக்கப்பட்ட வீடியோ என்று ஒன்றை வெளியிட்டார்.

  வெற்றிவேல் மீது வழக்கு

  வெற்றிவேல் மீது வழக்கு

  அந்த வீடியோவில் நைட்டி உடை அணிந்துள்ள ஜெயலலிதா இடது கையில் ஜூஸ் குடித்து கொண்டே டிவி பார்ப்பது போன்ற காட்சிகள் சுமார் 20 வினாடிகள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததால் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  செய்தியாளர்களிடம் பேட்டி

  செய்தியாளர்களிடம் பேட்டி

  இந்நிலையில் ஆர்கே நகரில் சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரன், சிறையில் சசிகலாவிடம் ஆசி வாங்க இன்று பெங்களூர் வந்திருந்தார். அப்போது சசியை பார்த்து ஆசி வாங்கிவிட்டு பின்னர் தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார்.
  அப்போது அவர் கூறுகையில் ஜெயலலிதா நினைவு நாள் முதற்கொண்டு சசிகலா சிறையில் மவுன விரதம் இருந்து வருகிறார். எப்போது முடிப்பார் என்று தெரியவில்லை.

  மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை

  மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை

  வெற்றிவேல் எங்களை மீறி ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டார்.
  ஜெயலலிதாவின் ஆன்மா மன்னித்து விடும் என்று வெற்றிவேல் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்தில் எந்த தவறும் நடக்கவில்லை. சசிகலாவிடம் இருந்து வீடியோ நகலை பெற்று நான் வெற்றிவேலிடம் கொடுத்தேன் என்றார் தினகரன்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  TTV Dinakaran says that there was nothing wrong happened in Jayalalitha's death.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற