என்னது எம்ஜிஆர் பாரத பிரதமரா? என்ன சொல்கிறார் திண்டுக்கல் சீனிவாசன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
என்னது ரெய்டு நடக்குதா? நான் இப்பத்தான் தூங்கி எந்திருச்சேன்-வீடியோ

திண்டுக்கல்: அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசும் போது, ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார்.

காலை முதலே தமிழகம் பரபரப்படைந்துள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்களுக்கு சொந்தமான வீடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

Dindigul Srinivasan said MGR as India's Prime Minister

இன்று திண்டுக்கல்லில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, எம்எல்ஏ விபிபி பரமசிவம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். எம்ஜிஆர் பிறந்தநாள் பற்றி பேட்டி அளித்தார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.
ஆரம்பத்திலேயே பாரத பிரதமர் என்று ஆரம்பித்தார். பின்னர் சமாளித்து பாரத ரத்னா எம்ஜிஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது என்று கூறினார். மேற்படி எல்லாம் இருக்கு என்றும் கூறினார். அவர் பிரியாணியை சொன்னாரா என்றும் கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே பாரத பிரதமர் மோடி என்று கூறுவதற்கு பதிலாக பாரத பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர் செல்வம் என்று கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Minister Dindigul Srinivasan has said that MGR as India's Prime Minister
Please Wait while comments are loading...