ரஜினியும், விஷாலும்தான் நல்லவர்களா.. தமிழர்கள் நல்லவர்கள் இல்லையா.. அமீர் கேள்வி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் நினைப்பது எங்களின் உரிமை அந்த ஆசை எங்களுக்கு இருக்கக் கூடாதா? தமிழ்நாட்டில் நல்லவங்களே இல்லையா, பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாக இருக்கிறார்களா. நடிகர் ரஜினியும், விஷாலும் தான் நல்லவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? என்று இயக்குனர் அமீர் கேட்டுள்ளார்.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் டெண்ட் கொட்டாய் நிகழ்ச்சியில் இயக்குனர் அமீர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மெர்சல் திரைப்பட விவகாரத்தில் எச். ராஜா நடிகர் விஜயை கிறிஸ்தவர் என்று அடையாளப்படுத்த என்ன தேவை இருக்கிறது. அவரின் டுவிட்டர் பக்கத்தில் அவர் சார்ந்த கருத்துகளை தெரிவிக்கலாம், ஆனால் அவர் எப்படி விஜயின் வாக்காளர் அடையாள அட்டையை அவர் எப்படி வெளியிட முடியும்.

தூய்மை இந்தியா திட்டத்தில் தெருக்களை சுத்தம் செய்து புகைப்படத்தை போடுகிறார்கள். ஆனால் எல்லோரும் புனிதமாக பார்க்கும் கங்கை நதி இன்னும் தூய்மை செய்யப்படவில்லையே. பிரதமர் நரேந்திர மோடி சொல்வது போல இந்தியா முழுவதும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டால் அதை நிச்சயம் வரவேற்பேன்.

 எங்களுக்கு பாரத மாதா இல்லையா?

எங்களுக்கு பாரத மாதா இல்லையா?

பாரத மாதா எங்களுக்கு சொந்தமில்லையா, இதைக் கேட்டால் நாங்கள் தான் தேசத்தின் மீது பற்று உள்ளது என்கிறார்கள். அப்படியானால் பாரத மாதா எங்களுக்கு மாதா இல்லையா? எச்.ராஜாவிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன், அவர் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காக என்ன செய்தார், அதைச் சொல்லட்டும் நாங்களும் அந்த வரலாற்றை தெரிந்து கொள்கிறோம்.

 வெற்றி வாக்குகள் கிடைக்காது

வெற்றி வாக்குகள் கிடைக்காது

ரஜினி, கமல் என்ற இமேஜை வைத்து மட்டும் அரசியலில் ஜெயிக்க முடியாது. அவர்களுக்கு நிச்சயம் வாக்குகள் கிடைக்கும் ஆனால் அவை வெற்றி பெறக்கூடிய வாக்குகளாக அமையாது, இருவருமே 10 சதவீத வாக்குகளை நிச்சயம் பெறலாம். அவர்கள் என்ன கொள்கைகளை முன்எடுக்கிறார்கள், யாருடன் சேர்ந்து அரசியலுக்கு வருகிறார்கள் என்பதைத் தான் பார்க்க வேண்டும்.

 எம்ஜிஆர் அரசியல் வேறு

எம்ஜிஆர் அரசியல் வேறு

எம்ஜிஆர் திரைப்படம் மூலம் அரசியலுக்கு வரவில்லை, தன்னுடைய படங்கள் மூலம் கொள்கைகளை சொல்லி சொல்லி கடைசியாக பல தோல்விகளைக் கண்டு தான் அரசியலுக்கு வந்தார். ஜெயலலிதாவும் சினிமா என்ற ஒன்றை மட்டுமே வைத்து அரசியலுக்கு வந்துவிடவில்லை, அவரும் கட்சிக்காக பாடுபட்டு பின்னர் தான் முதல்வர் என்ற நிலையை அடைந்துள்ளார்.

 மக்கள் பிரச்னையில் பங்கெடுத்தார்களா?

மக்கள் பிரச்னையில் பங்கெடுத்தார்களா?

ரஜினியோ, கமலோ இதுவரை என்ன மக்கள் பணியாற்றி இருக்கிறார்கள். முதலில் அவர்களுக்கு 234 தொகுதிகள் எங்கு இருக்கிறது என்று தெரியுமா, இவர்கள் இருவரும் கூடங்குளம்,நெடுவாசல் ராமேஸ்வரம் என இந்த இடங்களுக்கெல்லாம் வாக்கு கேட்டு மக்களிடம் சென்றால் இத்தனை நாட்கள் எங்களுக்காக என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்க மாட்டார்களா?அப்போது இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள்.

 தமிழன் ஆள வேண்டும்

தமிழன் ஆள வேண்டும்

தமிழ்நாட்டை தமிழன் ஆள வேண்டும் என்று நான் நினைப்பது எங்களின் உரிமை அந்த ஆசை எங்களுக்கு இருக்கக் கூடாதா? தமிழ்நாட்டில் நல்லவங்களே இல்லையா, பிற மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் நல்லவர்களாகத் தான் இருக்கிறார்களா. நடிகர் ரஜினியும், விஷாலும் தான் நல்லவர்கள் என்று சொல்ல வருகிறீர்களா? தமிழ் தேசியம் பேசும் எங்களிடம் ஒரு முறை ஆட்சியை கொடுத்துப் பாருங்கள், நாங்கள் இந்த கேள்வியைக் கேட்கும் போதே ஏன் தடை போடுகிறீர்கள் என்றும் அமீர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Cinema image not only help Rajinikanth and Kamalhaasan for their political entry apart from that what they did for people is the big question, Director Ameer talks in Puthiya thalaimurai television show.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற