ரஜினியுடன் திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர்... அழகிரி பகீர் தகவல்
Recommended Video

சென்னை: ரஜினியுடன் திமுக தலைவர்கள் தொடர்பில் உள்ளனர் என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நல குறைவு காரணமாக கடந்த 7-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து அவரது சமாதிக்கு கட்சியினரும் , குடும்பத்தினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய தினம் கருணாநிதிக்கு தனது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்த அழகிரி வந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில் என் ஆதங்கம் முழுவதையும் அப்பா கருணாநிதியிடம் கொட்டிவிட்டேன். ஆதங்கங்கள் எல்லாம் தற்போதைய அரசியல் நிலை குறித்துதான்.
என்னுடைய தலைவர் கலைஞருடைய உண்மையான விசுவாசமுள்ள உடன் பிறப்புகள் எல்லாம் என்னுடைய பக்கம்தான் இருக்கிறார்கள். அவர்கள் என்னை ஆதரித்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு காலம் பின்னால் பதில் கூறும், இப்போது அது உங்களுக்கு புரியாது.
மேலும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் செயல்படாத தலைவராக உள்ளார். நான் கட்சியில் மீண்டும் சேர வேண்டும் என தொண்டர்கள் விரும்புகின்றனர். திமுக நிர்வாகிகள் ரஜினிகாந்துடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications