ஹார்வார்டு பல்கலை. தமிழ் இருக்கை: திமுக ரூ 1 கோடி நிதி உதவி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய திமுக சார்பில் ரூ 1 கோடி நிதி வழங்கப்படும் என்று செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக் கழகம் அமெரிக்காவில் மாசசூஸெட்ஸ் மாகாணத்தில் உள்ளது. இந்த பல்கலைக் கழகத்தில் உலகின் மூத்த மொழிகளில் முதன்மையானதாகக் கருதப்படும் தமிழுக்கென ஒரு இருக்கை (Tamil Chair) அமைய வேண்டும் என அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்கள் முயற்சி மேற்கொண்டனர்.

ஏற்கெனவே மற்ற மூத்த மொழிகளான கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, பாரசீகம், சமஸ்கிருதம், சீனம் ஆகிய மொழிகளுக்கு இப் பல்கலைக் கழகத்தில் இருக்கைகள் அமைக்கப்பட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் இருக்கைக்கென ரூ 33 கோடி செலவாகும் என ஹார்வர்டு பல்கலைக் கழகம் கூறிவிட்டது.

அமெரிக்கா

அமெரிக்கா

இதற்கான நிதியை அமெரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான தமிழர்கள் வழங்கி வருகின்றனர். அதன்படி தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி நிதியாக வழங்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் நடிகர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு பண உதவி செய்தனர்.

ரூ. 32 கோடி

ரூ. 32 கோடி

இந்நிலையில் கடந்த வாரம் புத்தக கண்காட்சியில் விற்பனை செய்யப்பட்ட ரூ. 4.50 லட்சத்துடன் கூடுதல் நிதி போட்டு ரூ. 5 லட்சமாக கவிஞர் வைரமுத்து வழங்கினார். தமிழ் இருக்கை அமைய தேவையான நிதியில் ரூ .32 கோடி கிடைத்துவிட்டதாகவும் மீதமுள்ள ரூ. 1கோடி தேவை என்றும் கூறப்பட்டது.

கருணாநிதி சார்பில்

கருணாநிதி சார்பில்

இதைத் தொடர்ந்து தமிழ் இருக்கைக்கு ரூ. 1 கோடி நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழ் மொழியின் மேம்பாட்டுக்காகவும் முதன்மைக்காகவும் போராடும் கருணாநிதி சார்பில் இந்த நிதி வழங்கப்பட்டது.

அரியணை ஏறும்

அரியணை ஏறும்

தமிழுக்கு கிடைக்கப் போகும் ஹார்வார்டு இருக்கை என்பது ஒவ்வொரு தமிழனின் பெருமையாகும். உயர்நீதிமன்றம், மத்திய அரசு அலுவலகங்களில் ஒரு நாள் தமிழ் நிச்சயம் அரியணை ஏறியே தீரும். விரைவில் தமிழ் இருக்கை அமைந்து தேமதுர தமிழோசை உலகமெங்கும் பரவ வழி வகை செய்ய வேண்டும் என்றார் அவர். ரூ.1 கோடி அளவுக்கு அதிக நிதி கொடுக்கும் கட்சி என்ற பெருமையை திமுக பெற்றுள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK Working President announces Rs. 1 crore for Tamil Chair in Harward University.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற