மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோட்டில் திமுக மண்டல மாநாடு: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் மார்ச் 24, 25 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் திமுகவின் மண்டல மாநாடு நடைபெறும் என்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக, பாஜக உள்பட 57 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர். இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி இன்று திமுக மாவட்ட செயலாளர்ள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியை அடுத்து மாவட்டச் செயலாளர்களை உத்வேகப்படுத்தும் வகையிலும், அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காகவும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டது.

என்னென்ன தீர்மானங்கள்?

என்னென்ன தீர்மானங்கள்?

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் வருவதால் அதில் மாபெரும் வெற்றி பெற பிரசார யுத்திகளை வகுப்பது. ரஜினி, கமல் ஆகியோர் புது கட்சி தொடங்கவுள்ளதால் அவர்கள் கட்சிக்கு செல்லாத வகையில் திமுகவினரை அரவணைத்து செல்வது. ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில் அரசு தேவையான நிவாரண உதவிகளை மேற்கொள்ளாதது குறித்து மக்களிடம் எடுத்துரைப்பது.

ஆ.ராசா, கனிமொழி விடுதலை

ஆ.ராசா, கனிமொழி விடுதலை

2ஜி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி எம்.பி. விடுதலை அடைந்ததற்கு பாராட்டுகளையும், வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டது. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் மக்கள் அவதியடைகின்றனர். அவர்களுடன் அமைச்சருக்கு பதிலாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

கரும்பு நிலுவைத் தொகை

கரும்பு நிலுவைத் தொகை

ஆளுநர் ஆய்வுகளை நடத்த கூடாது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். ஒகி புயல் நிவாரண நிதியை உடனே வழங்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது, கரும்பு விவசாயிகளுக்கு உரிய நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

கடன் சுமையை

கடன் சுமையை

தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா ஆகியவற்றை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் கடன் சுமையை நிபுணர் குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.

24, 25-ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மாநாடு

24, 25-ஆகிய தேதிகளில் ஈரோட்டில் மாநாடு

தமிழகத்தில் மாநில உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன. சமூக நீதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. எனவே மாநில சுயாட்சி, சமூக நீதி, மத நல்லிணக்கம் ஆகியவற்றை வலியுறுத்தி மார்ச் 24, 25-ஆம் தேதிகளில் ஈரோட்டில் மண்டல மாநாட்டை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று நமது ஒன் இந்தியா தமிழ் தளத்தில் செய்தி வெளியிட்டது நினைவுக்கூரத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
DMK's regional conference will be held in Erode on March 24,25.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற