For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவில் தொடரும் அதிரடி- அனிதா ராதாகிருஷ்ணன், பூங்கோதை, வீரபாண்டி ராஜா உட்பட 15 பேருக்கு நோட்டீஸ்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திமுகவில் அடுத்தடுத்து களை எடுப்பு நடவடிக்கை தீவிரமாகியுள்ளது. தேர்தலில் சரியாக பணியாற்றாதது ஏன் என்பது குறித்து முன்னாள் அமைச்சர் பூங்கோதை, தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், வீரபாண்டி ராஜா உட்பட 15 நிர்வாகிகளுக்கு தற்போது விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து கட்சியை சீரமைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

33 பேர் சஸ்பென்ட்

33 பேர் சஸ்பென்ட்

இக்குழுவின் பரிந்துரையின்படி திமுக 65 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அத்துடன் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்த பழனி மாணிக்கம் உட்பட 33 நிர்வாகிகள் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் தங்களது தரப்பு விளக்கத்தை அளிக்க ஒரு வார காலம் கெடு விதிக்கப்பட்டிருந்தது.

கருணாநிதியுடன் பழனிமாணிக்கம் சந்திப்பு

கருணாநிதியுடன் பழனிமாணிக்கம் சந்திப்பு

சஸ்பென்ட் செய்யப்பட்ட பழனிமாணிக்கம் உடனே திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தார்.

ஸ்டாலின் மீது புகார்

ஸ்டாலின் மீது புகார்

ஆனால் முல்லை வேந்தன், ராஜ்யசபா எம்.பி. கே.பி. ராமலிங்கம் ஆகியோர் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றனர். இதனால் அவர்கள் கட்சியை விட்டே டிஸ்மிஸ் செய்யப்படக் கூடும் எனத் தெரிகிறது.

மேலும் 15 பேருக்கு நோட்டீஸ்

மேலும் 15 பேருக்கு நோட்டீஸ்

இந்த நிலையில் அடுத்த கட்டமாக திமுகவின் மூத்த நிர்வாகிகள் 15 பேருக்கு தேர்தலில் சரியாக பணியாற்றாதது தொடர்பாக விளக்கம் கேட்டு திமுக தலைமை நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன், பூங்கோதை, வீரபாண்டி ராஜா

அனிதா ராதாகிருஷ்ணன், பூங்கோதை, வீரபாண்டி ராஜா

முன்னாள் அமைச்சர்கள் பூங்கோதை, லாரன்ஸ், தூத்துக்குடி அனிதா ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ., அப்பாவு, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மகன் பிரபாகரன், கம்பம் செல்வேந்திரன், திண்டுக்கல் முன்னாள் நகரசபை தலைவர் பஷீர் அகமது, வி.பி.ராஜன், ஏ.ஜி.சம்பத், வீரபாண்டி ராஜா, கடலூர் புகழேந்தி, தென் சென்னை சதாசிவம், வட சென்னை ஆர்.டி.சேகர், வேலூர் முகமது சகி, திருவண்ணாமலை நகரசபை தலைவர் ஸ்ரீதரன், உள்ளிட்டோருக்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களுக்கும் ஒரு வாரம் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொடுக்கும் விளக்கத்தைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை திமுக தலைமை மேற்கொள்ள இருக்கிறது.

English summary
Sending a strong signal that indiscipline would not be tolerated, DMK slapped show cause notices to another 15 leaders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X