தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நாளை முக்கிய முடிவு: ஸ்டாலின்
திமுக நாளை முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவாரூர்: சென்னையில் நாளை கூடும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் திருவாரூரில் இன்று இரவு நடைபெற்றது. இதில் திமுகவின் தோழமை கட்சித் தலைவர்களான வீரமணி, வைகோ, திருநாவுக்கரசர், திருமாவளவன், முத்தரசன், பேராசிரியர் காதர் மொகிதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் சிறப்புரையாற்றிய மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையை திமுக புறக்கணித்தது குறித்து விளக்கம் அளித்தார். அத்துடன் மக்கள் விரும்பும் முடிவு ஒன்றை சென்னையில் நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதித்து அறிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதற்கான அவசர சட்டம் கோரி திமுக சட்டசபையை புறக்கணித்து வருகிறது, அத்துடன் மாதிரி சட்டசபையையும் திமுக நடத்தி வருகிறது.
இந்த நிலையில் திமுக முக்கிய முடிவு ஒன்றை நாளை அறிவிக்க உள்ளதாக ஸ்டாலின் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications