கருணாநிதி நலம் பெற கையெழுத்து இயக்கம்.. வெள்ளை துணியில் பிரபலங்களின் கையெழுத்து
கருணாநிதி நலம் பெற வேண்டி தொண்டர்கள் கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளனர்.
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி விரைவில் நலம் பெற வேண்டி திமுகவினர் தொடங்கிய கையெழுத்து இயக்கத்தில் ஏராளமானோர் தொடர்ந்து கையெழுத்திட்டு வருகின்றனர்.
உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து நேற்றுமுன்தினம் இரவு முதல் காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை குறித்து இந்திய, மற்றும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து விட்டு செல்கின்றனர்.

அதேபோல, ஏராளமான தொண்டர்கள் தமிழகம் முழுவதிலுமிருந்து மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். இந்நிலையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் காணப்படுவதாக மருத்துவமனை தரப்பு அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையினால் தொண்டர்கள் ஓரளவு நிம்மதி அடைந்தார்கள்.
எனினும் கருணாநிதி முழுமையாக நலம் பெற வேண்டும் என்று திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கையெழுத்து இயக்கம் ஒன்றை தொடங்கினர். அதன்படி மருத்துவமனை வாயிலிலேயே ஒரு வெள்ளை துணி கட்டி விடப்பட்டுள்ளது. அங்கு வரும் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அதில் கையெழுத்திட்டு செல்கின்றனர்.
தொண்டர்களும் தங்களின் தலைவர் விரைவில் குணமடைய வேண்டும் என்ற செய்திகளை எழுதி கையெழுத்திட்டு வருகின்றனர். ஒருசிலர் கருணாநிதி செய்த சாதனைகள் குறித்து வார்த்தைகளை பதிவிட்டு கையெழுத்திட்டுள்ளனர்.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications