டுவிட்டரில் தேசிய அளவில் இடம்பெற்ற ஸ்டாலின் #DMKThalaivarStalin
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தேசிய அளவில் ட்ரெண்டாகும் #DMKThalaivarStalin ஹேஷ்டேக்- வீடியோ
சென்னை: திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பதவியேற்கவுள்ள நிலையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது.
திமுக தலைவர் கருணாநிதி மறைந்தவுடன் அப்பதவிக்கு ஸ்டாலினை தேர்வு செய்வது என்றும் அதற்காக ஆகஸ்ட் 28-ஆம் தேதி உள்கட்சி தேர்தல் நடத்துவது என்றும் திமுக முடிவு செய்தது.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான வேட்புமனுவை ஸ்டாலின் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்தார். இதையடுத்து அப்பதவிக்கு யாரும் வேட்புமனுவை தாக்கல் செய்யாததால் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி அறிவித்தார்.
இந்நிலையில் இன்று பொதுக்குழு கூடுகிறது. அதில் திமுக தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்படும் நிலையில் #DMKThalaivarStalin என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications