For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வி.வி.ஐ.பிகள் வரவேற்பிற்கு மாணவர்களை ஈடுபடுத்துவது குற்றம் - ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

மதுரை: பள்ளி, கல்லூரிகளில் வி.வி.ஐ.பிகளுக்கு கொடுக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த விஜயகுமார் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ''மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பதவி வகித்தவர் கல்யாணி. இவரது பணி நியமனம் செயல்லாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் கல்யாணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் படித்து வரும் 50 மாணவர்களை வெளியிலில் காத்திருந்து கல்யாணி வந்ததும் அவர் மீது மலர் தூவி வரவேற்பு அளிக்க வைத்தனர்.

இந்த செயல் குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது. எனவே, தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் படித்து வரும் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பிக்கள் வரவேற்பில் பங்கத்தடை விதிக்குமாறு, பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு, ''பொது நிகழ்ச்சிகள் மற்றும் வி.வி.ஐ.பி.க்கள் வரவேற்பில் மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்'' என மதுரை முதன்மைக் கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டனர். மேலும், அந்த நகலை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

English summary
Schools and college management wont use students for VVIP's welcome, Madurai court ordered.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X