For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Breaking News: சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் ட்ரம்ப்- கிம் கையெழுத்து!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தங்களில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் இன்று கையெழுத்திட்டனர். அணு ஆயுதங்கள் இல்லாத நாடாக வடகொரியா மாறும் என்று ட்ரம்ப்பும் உலகின் மிகப் பெரிய மாற்றத்தைக் காண பழைய சம்பவங்களை மறப்போம் என கிம்மும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Newest First Oldest First
8:10 PM, 12 Jun

வாஜ்பாயின் உடல்நிலையை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணிக்கிறது

தொடர் சிகிச்சையால் வாஜ்பாயின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை

8:06 PM, 12 Jun

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நலமுடன் உள்ளார் - எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை
7:27 PM, 12 Jun

சேலையை பிடித்து இழுத்து சட்டசபையில் இருந்து வெளியேற்றினர்

காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி பரபரப்பு குற்றச்சாட்டு

சட்டசபையில் சபாநாயகரும் அநாகரீகமான முறையில் பேசினார் - விஜயதாரணி

6:39 PM, 12 Jun

நீரவ் மோடிக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் மும்பை நீதிமன்றம் அதிரடி

6:18 PM, 12 Jun

பாம்பனில் பலத்த சூறைக்காற்று - ரயில்கள் நிறுத்தம்

சென்னை, மதுரை ரயில்கள் பாம்பனில் நிறுத்தம்

5:20 PM, 12 Jun

நீட் விவகாரத்தில் தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேடப்படுகிறது - ஹைகோர்ட்

முன்கூட்டியே அறிவுரை வழங்காமல் இறந்த பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது

அரசியல் கட்சிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்

5:01 PM, 12 Jun

அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மனம் உள்ளது, ஆனால் பணம்தான் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தாமரை இல்லாமல் இலை இல்லை என கூறுபவர்கள் கற்பனை உலகத்தில் உள்ளனர்: ஜெயக்குமார்

தாமரை, சூரியன், மய்யம் என எதற்கும் தமிழக மக்கள் மனதில் இடம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

3:59 PM, 12 Jun

சென்னையில் போலீஸ் தாக்கி முதியவர் பலி

மதுரவாயலில் போக்குவரத்து காவலர் ராமலிங்கம் தாக்கியதில் முதியவர் பலி

2:57 PM, 12 Jun

ம.பி. சாமியார் பையூஜி மகாராஜ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
2:33 PM, 12 Jun

அணு ஆயுதங்களை வடகொரியா அழித்தால்தான் பொருளாதார தடை விலக்கப்படும்: ட்ரம்ப்
2:32 PM, 12 Jun

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு விசாரணை நடத்த உத்தரவு

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு

ராஜேந்திர பாலாஜி சொத்து விவரத்தை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாரணை அறிக்கையை ஆகஸ்ட் 3-ல் தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவு

2:22 PM, 12 Jun

வடகொரியா நாடு அற்புதமான இடமாக இருக்க சாத்தியம்
கிம்முடனான சந்திப்பு நேர்மையானதாக, ஆக்கப்பூர்வமானதாக இருந்தது
பிரதான அணு ஆயுத சோதனை தளத்தை அழிக்க தொடங்கிவிட்டார் கிம்- ட்ரம்ப்
கிம் புத்திசாலி.. சிறுவயதில் ஆட்சியில் அமர்ந்துள்ளார்
கிம்முடன் மனித உரிமைகள் குறித்து விவாதிக்கப்பட்டது- ட்ரம்ப்
2:20 PM, 12 Jun

ஏவுகணை தளங்களை அழிப்பதாக வடகொரியா உறுதியளித்துள்ளது - ட்ரம்ப்

வடகொரியா, தென்கொரியாவில் பிரிந்துள்ள குடும்பங்கள் விரைவில் இணையும் - ட்ரம்ப்

வடகொரியா மீதான பொருளாதார தடை தொடரும் - ட்ரம்ப்

அணு ஆயுதங்களை முழுமையாக அழித்த பின்னரே தடை நீக்கப்படும் - ட்ரம்ப்

2:20 PM, 12 Jun

கிம் ஜாங் உன்னை அமெரிக்கா வருமாறு அழைப்பு விடுத்துள்ளேன் - ட்ரம்ப்

வடகொரியா - அமெரிக்கா இடையே கசப்புணர்வு மறைந்துள்ளது - ட்ரம்ப்
சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டி

1:10 PM, 12 Jun

நீட் தேர்வுகளை இனி சிபிஎஸ்இ நடத்தாது- மத்திய அரசு

தேசிய தேர்வு முகமைதான் இனி நீட் தேர்வு நடத்தும்

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

12:45 PM, 12 Jun

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல்நிலை ஸ்திரமாக உள்ளது

ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளை உடல் ஏற்றுக்கொள்கிறது

இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் வாஜ்பாய் சிகிச்சை பெறுவார்- எய்ம்ஸ்

12:37 PM, 12 Jun

அடுத்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கும்

சென்னையில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

12:12 PM, 12 Jun

சட்டவிரோத எக்சேஞ்ச்- கலாநிதி, தயாநிதி விடுதலையை எதிர்த்து சிபிஐ மேல்முறையீடு

மாறன் சகோதரர்களை கடந்த மார்ச் மாதம் சிபிஐ நீதிமன்றம் விடுதலை செய்தது

மாறன் சகோதரர்கள் விடுதலைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு

12:09 PM, 12 Jun

வடகொரியாவில் அணு ஆயுதங்களை அழிக்க கிம் ஜாங் உன் ஒப்புதல்

ட்ரம்ப்புடனான ஒப்பந்தத்தில் அணு ஆயுதங்களை அழிக்க கிம் ஒப்புதல் என தகவல்

12:07 PM, 12 Jun

வடகொரியாவில் அணு ஆயுதங்கள் முழுமையாக ஒழிக்கப்படும்- அதிபர் கிம் அறிவிப்பு
12:06 PM, 12 Jun

சட்டசபையில் இருந்து விஜயதாரணி வெளியேற்றம்

பெண் என்றும் பாராமல் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவு- விஜயதாரணி

11:58 AM, 12 Jun

சிங்கப்பூரில் வரலாற்று சிறப்புமிக்க உச்சிமாநாடு நிறைவு
11:58 AM, 12 Jun

செந்தோசா தீவில் இருந்து ட்ரம்ப் புறப்பட்டார்

சிங்கப்பூரில் இருந்து கிம்மும் வடகொரியா புறப்படுகிறார்

11:58 AM, 12 Jun

கல்லணையில் இறங்கி விவசாயிகள் போராட்டம்

போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்காததற்கு எதிர்ப்பு

11:39 AM, 12 Jun

கிம் ஜாங்-உன்னுடன் சிறப்பான உறவு ஏற்பட்டுள்ளது- ட்ரம்ப்

நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பான சந்திப்பு- ட்ரம்ப்

சந்திப்பை நினைத்தால் பெருமையாக உள்ளது- ட்ரம்ப்

கடந்த காலங்களை விட்டுவிடப் போகிறோம்- கிம்

உலகம் மிகப் பெரிய மாற்றத்தைக் காணப் போகிறது- கிம்

11:34 AM, 12 Jun

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் இடியுடன் கனமழை- பாலச்சந்திரன்
11:22 AM, 12 Jun

பழைய சம்பவங்களை மறக்க முடிவு செய்துள்ளோம்: ட்ரம்ப்
11:17 AM, 12 Jun

கொரிய தீபகற்பத்துடன் புதிய உறவு ஏற்பட்டுள்ளது- ட்ரம்ப் பெருமிதம்
11:17 AM, 12 Jun

சிங்கப்பூரில் அமெரிக்கா- வடகொரியா முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்- வடகொரியா அதிபர் கிம் கையெழுத்திட்டனர்

10:51 AM, 12 Jun

புழல் சிறையில் இருந்து 52 ஆயுள் கைதிகள் விடுதலை
READ MORE

English summary
Coimbatore district schools have been declared holiday as heavy rains lashes today. The school and colleges have been declared holidays in 3 taluks in Nilgiris district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X