For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்காசி தொகுதியில் கிருஷ்ணசாமி தீவிர பிரச்சாரம்

|

சங்கரன்கோவில்: தென்காசி பகுதி மக்களுக்காக, வேலை இல்லாதவர்களுக்காக தென்காசி பகுதியில் புதிய தொழிற்சாலை அமைக்கப்படும் என திமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

DR.Krishnasami campaign at Thenkasi…

தென்காசி பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தென்காசி தொகுதியில் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்கான செயல் வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவிலில் நடந்தது. திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமி பாண்டியன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கிருஷ்ணசாமி பேசியதாவது, "தென்காசி தொகுதியில் வேலை இல்லா திண்டாடத்தை போக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப்படும்,. விவசாய நிலங்கள் பயன் பெற பாசன வசதி, செண்கபவல்லி அணைக்கட்டை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்வேன். குருவிகுளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர் ஆகிய ஓன்றிய பகுதிகளில் வறட்சியை போக்க மேற்கு தொடர்ச்சி அணையீின் திட்டங்களை செயல்படுத்துவேன். விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை பாராளுமன்றத்தில் எழுப்புவேன். மாவட்டத்தில் பலர் வேலை இல்லாததால் வேலை தேடி வெளி மாவட்டத்துக்கு இடம் பெயர்ந்துள்ளனர். புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டால் அவர்கள் மீண்டும் சொந்த ஊர் திரும்புவர். ஆகவே திமுக கூட்டணிக்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்" இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் திமுக மாவட்ட பொருளாளர் சேக் தாவூது, தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராமலிங்கம் உள்ளிட்ட தோழமை கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதனால் தென்காசி தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி விட்டது. இனி அடுத்தடுத்து தலைவர்களும் வர இருப்பதால் கடும் போட்டி நிலவும் என்று தெரிகிறது.

English summary
DMK’s coalition party leader DR. Krishnasami engaged campaign for coming lokshabha election in Thenkasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X