தனிக்கட்சி தொடங்கும் வாய்ப்பை விட்டுவிடமாட்டார் ரஜினிகாந்த் ... இது ராமதாஸின் நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் கட்சிகளை அதிரவைத்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். தனிக்கட்சி தொடங்கும் முடிவுக்கு வந்துள்ள ரஜினிகாந்த் தொடர்பாகத்தான் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன.

தமிழகத்தில் நிலவும் குழப்பமான அரசியல் சூழலை அனைத்து தரப்பும் பயன்படுத்தி கொள்ள துடிக்கின்றன. பாஜகவோ ரஜினிகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் நிலைக்கும் போனது.

தனிக்கட்சி தொடங்கும் ரஜினி

தனிக்கட்சி தொடங்கும் ரஜினி

ஆனால் ரஜினிகாந்த், தனிக்கட்சி தொடங்கி களம் காணும் முடிவுக்கு வந்துவிட்டார். இதனைத் தான் தமது ரசிகர்களிடம் பேசும்போது, அரசியலுக்கு வரமாட்டேன்னு நினைச்சுடாதீங்க; அப்படி வரும்போது பணம் சேர்க்கிற ஆசைப்படுறவங்களை சேர்க்கமாட்டேன்னு பேசினார்.

முதலைகள், விபத்து

முதலைகள், விபத்து

அத்துடன் முதலைகள், அரசியல் விபத்து என்றெல்லாம் கட்சிகளை லேசாக இடித்துக் காட்டியும் பேசினார் ரஜினிகாந்த். இது தொடர்பாக திமுக கடும் கோபத்தில் இருக்கிறது.

பாமக ஆலோசனை

பாமக ஆலோசனை

ஏற்கனவே ரஜினிகாந்தை பரம வைரியாக பார்க்கிறது பாமக. அதுவும் இப்போது குடி, சிகரெட்டை விடுங்க என ரஜினிகாந்தே வேண்டுகோள் விடுத்திருப்பது பாமகவை சற்றே அதிரவைத்துள்ளது.

ரஜினி விடமாட்டார்

ரஜினி விடமாட்டார்

இது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ். அப்போது, இந்த வாய்ப்பை நிச்சயம் ரஜினிகாந்த் நழுவவிடமாட்டார். தனிக்கட்சி தொடங்கிவிடுவார் என்றே தோன்றுகிறது என கூறியிருக்கிறார். இருப்பினும் ரஜினியின் நடவடிக்கைகளை கூர்ந்து பார்ப்போம் என மட்டும் சொல்லியிருக்கிறார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
PMK Founder Ramadoss confident over that Rajinikanth will launch new political party.
Please Wait while comments are loading...