For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெயிலில் வாடவேண்டாம்….வாக்குப்பதிவு நேரம் 2 மணிநேரம் அதிகரிப்பு: பிரவீண்குமார்

By Mayura Akilan
|

சென்னை: கோடை காலத்தை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாக்களிப்பதற்கு 2 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை (9 மணி நேரம்) நடத்தப்படுகிறது. தற்போது வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவும், ஓட்டுப்பதிவு முடியும் நேரத்தை ஒரு மணிநேரம் நீட்டித்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

EC extends voting time by two hours

இதுகுறித்து தலைமைத்தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளதாவது:

''மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, வாக்குப்பதிவு நேரத்தை மாற்றி அமைப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.

ஓட்டுப்பதிவு செய்யும் நேர அளவு, 8 மணி நேரத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது. தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்கும் காலகட்டம், மிகவும் உஷ்ணமாக இருக்கும் என்பதை தேர்தல் ஆணையம் அறிந்துள்ளது. சில இடங்களில் சூரிய உதயமும் அஸ்தமனமும் முன்கூட்டியே இருக்கக்கூடும்.

எனவே, வாக்காளர்களின் வசதிக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதியிலும் ஓட்டுப்பதிவு நேரத்தை காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணி வரை நீட்டிக்க (11 மணி நேரம்) முடிவு செய்யப்படுகிறது.

இதன் மூலம் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலிலும் ஏராளமான வாக்காளர்கள் வந்து வாக்களிப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் எதிர்பார்க்கிறது" என்று அதில் கூறியுள்ளார்.

English summary
To increase the voting percentage in Lok Sabha polls, which will be held amid peak summers, Election Commission of India (ECI) has extended the voting hours by two. Voting will start from 7 in the morning and will continue till 6pm.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X