அரசியலுக்கு வர நினைக்கும் நடிகர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லோரும் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் இன்று நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். அதில் அரசியலுக்கு வர விரும்பும் நடிகர்களுக்கு எச்சரிக்கைவிடுக்கும் வகையில் பேசினார்.

Edapapdi Palanisamy slam actors who try to enter politics

அதிலும் சமீபகாலமாக கமல்ஹாசன், தமிழக அரசை விமர்சனம் செய்துவரும் நிலையில், முதல்வர் எடப்பாடியின் பேச்சு, கமலுக்கு எதிரானதாக பார்க்கபபடுகிறது. முதல்வர் பேசுகையில், "எம்.ஜி.ஆர் என்பவர் இந்த உலகத்தில் ஒருவர்தான் இருக்க முடியும். நடிகராக இருந்து தலைவராக உயர நினைப்போர்கள், மக்கள் களத்திற்கு வந்து, மக்களுக்காக உழைக்க வேண்டும். மக்களின் இன்ப, துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவர்கள் எம்ஜிஆராக உயர்வார்களா, இல்லையா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மக்கள் மனக்கோட்டையை பிடிக்க முடியாதவர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை பிடிக்க முடியாது" என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edapapdi Palanisamy slam actors who try to enter politics and says not every one become MGR.
Please Wait while comments are loading...