இயக்கமா? கட்சியா?... ரஜினிக்கு இன்னும் தீராத குழப்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  நாளை அந்த முக்கியமான தகவலை வெளியிடுவதை உறுதி செய்தார் ரஜினி

  சென்னை : தமிழகம் முழுவதும் ரசிகர் மன்றமா மட்டும் தற்போது செயல்படுபவர்களை ஒழுங்குபடுத்தி இயக்கமாக மாற்றுவதா அல்லது எடுத்த எடுப்பில் கட்சியாக அறிவிப்பதா என்பதில் நடிகர் ரஜினிக்கு குழப்பம் இருப்பதாக தெரிகிறது. முதலில் இயக்கத்தை வரைமுறைபடுத்தி அவர்களுக்கு அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சரிபடுத்திவிட்டு பின்னர் கட்சியாக மாற்றலாமா என்பதே ரஜினியின் வியூகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

  ரசிகர்களைச் சந்திக்க கிளம்பும்போது, போயஸ்கார்டன் வீட்டில் செய்தியாளர்கள் தடுத்து எழுப்பியகேள்விகளுக்கு ரஜினியிடம் தெளிவான பதில் இல்லை. திராவிடக்கட்சிகளை எதிர்த்து எப்படி அரசியல் செய்வீர்கள்? என்ற கேள்விக்கு சாரி நோ கமெண்ட்ஸ் என்றார். அதேபோல், தமிழ்நாட்டு என்ன திட்டம் வெச்சிருக்கறீங்க? என்ற கேள்விக்கு ரஜினியின் புன்னகை சமூகவளைதளத்தில் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

  அதேபோல், ரசிகர்கள் மத்தியில் பேசும் போது ரஜினி சொன்ன விஷயங்களும் அவரது அடுத்த மூவ் குறித்து விளக்கமாக புரிந்துகொள்ள உதவுகிறது. போரில் வெற்றிபெற வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும், போருக்கு போனால் ஜெயிக்கவேண்டும் என்றார் ரஜினி.

  காத்திருப்புக்கான குறியீடா?

  காத்திருப்புக்கான குறியீடா?

  அதேபோல், யார் காலிலும் விழக்கூடாது என்று சொன்னார் ரஜினி. இந்த கருத்துக்குகளுப்பின்னால், அரசியல் தர்க்கம் உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். மேலும், காலம் மாறும் என்ற ரஜினியின் வசனமும் காத்திருப்புக்கான குறியீடாக பார்க்கமுடிகிறது.

  வலுவாக இல்லாத ரசிக மன்றம்

  வலுவாக இல்லாத ரசிக மன்றம்

  தமிழகம் முழுவதும் உள்ள ரஜினி ரசிகர்களை ஒரு குடையின் கீழ், ஒரு இயக்கத்தின் கீழ் கொண்டுவருவதே ரஜினியின் முதல் அசைண்மெட்டாக இருக்கலாம். அவசரப்பட்டு, அரசியல்கட்சியை தொடங்க ரசிகர் மன்றம் இன்னும் அவ்வளவு வலுவானதாக இல்லை என்பதே ரஜினியின் எண்ண ஓட்டமாக இருக்கிறது என்கிறார் மூத்த ரசிகர் மன்ற நிர்வாகி. மேலும், முறையான உறுப்பினர் அட்டை, மாவட்ட, தாலுக்கா, கிளை என முறையான நிர்வாகிகள் அறிவித்து இயக்கத்தை வலுச்சேர்க்க வேண்டும் என்று ரஜினி கருதுவதாக தெரிகிறது.

  இயக்கத்தின் மீதே நம்பிக்கை

  இயக்கத்தின் மீதே நம்பிக்கை

  அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதற்கு முன்னாள், கட்சி, கொள்கை குறித்து தெளிவாக அறிவிக்க வேண்டும். அந்த தெளிவு இப்போதைக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேபோல், ரஜினியின் வெளிமுகமாக காட்டிக்கொள்ளும் தமிழருவி மணியனுக்கும் அரசியல் கட்சியைவிட, இயக்கத்தின் மீது முழுமையான நம்பிக்கை உள்ளது. இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும் போது, கட்சியைவிட ரஜினி இயக்கம் குறித்த அறிவிப்பை வெளியிடவே வாய்ப்பு அதிகம் எனத்தெரிகிறது.

  நாளை தெளிவுபடுத்துவாரா?

  நாளை தெளிவுபடுத்துவாரா?

  நாளை காலை 8.30 மணிக்கு, ராகவேந்திரா மன்றம் மட்டுமல்ல, தமிழகம் முழுவதும் இருக்கும் ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் என்ன சொல்லப்போகிறார் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 1996 ஆண்டிலிருந்து இதோ, அதோ என்று அரசியல் பிரவேசம் குறித்து தெளிவாக சொல்லாத ரஜினி, நாளை தெளிவு படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Highly placed sources of Rajinikanth says that he is converting his fans club into movement, this is his tomorrow announcement agenda.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற