For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசியல் கட்சிகளின் வித்தியாசமான சின்னங்களும்… சிக்கல்களும்…

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: ஆம் ஆத்மி கட்சி துடைப்பம் சின்னத்தை அறிவித்து அதிரடியை ஏற்படுத்தியது போல, கிரண்குமார் ரெட்டி தான் தொடங்கியுள்ள ஜெய் சம்க்யாந்திரா கட்சிக்கு ‘செருப்பு' சின்னத்தை அறிமுகம் செய்துள்ளார்.

இந்தியாவில் தேர்தல் முதன்முதலாக அறிவிக்கப்பட்டபோது நாட்டில் எழுத்தறிவு பெற்றோர் மிகவும் குறைவு. அவர்கள் தங்கள் வாக்குகளை மாற்றி அளித்துவிடக்கூடாது என்பதற்காகவே அவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும்படியாக, நடைமுறைப் புழக்கத்தில் உள்ள கருவிகள், உயிரினங்கள் போன்றவை தேர்தல் சின்னங்களாக அறிவிக்கப்பட்டன.

வேட்பாளரின் பெயரை படிக்க முடியாத பாமரர்கள் சின்னத்தை வைத்து தங்கள் வேட்பாளரைத் தேர்வு செய்து, முத்திரை குத்தினார்கள்.

அதன்காரணமாக இன்றைக்கு கட்சி தொடங்கும் அரசியல் தலைவர்கள் தங்கள் சின்னத்தை தேடி தேடி வித்தியாசமாக அறிவிக்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் கை

காங்கிரஸ் கட்சியின் கை

மனித உடலில் ‘கை' இன்றியமையாத ஒன்று இதை எளிதில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் கை சின்னம் காங்கிரஸ் கட்சியின் சின்னமானது.

லாந்தர் விளக்குச் சின்னம்

லாந்தர் விளக்குச் சின்னம்

மின்சாரம் இல்லாத வீட்டிற்கு ஒளிதருவது லாந்தர் விளக்குச் சின்னம்தான். பீகாரின் லாலுபிரசாத் யாதவ் தனது கட்சியின் சின்னத்தை

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சீலிங் பேன்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சீலிங் பேன்

வீட்டில் இன்றைக்கு அத்தியாவசியமாக உள்ள மின்விசிறியை ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன் மோகன் ரெட்டி தனது சின்னமாக அறிவித்தார்.

இரட்டை இலை

இரட்டை இலை

திமுகவில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் இரட்டை இலை சின்னத்தை அறிமுகம் செய்தார். இரட்டை இலையை குறிக்கும் வகையில் தனது இரட்டை விரலை உயர்த்தி மக்களுக்கு காட்டுவார். இதன்மூலம் விக்டரி என்று சொன்னது போலவும் ஆனது. கட்சியின் சின்னத்தை எளிதில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார் எம்.ஜி.ஆர்.

சைக்கிள் சின்னம்

சைக்கிள் சின்னம்

காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் தொடங்கிய மூப்பனார், தனது கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது ரஜினியின் அண்ணாமலை படத்தில் வந்த சைக்கிள் பாட்டு சின்னத்தை பிரபலப்படுத்தியது. வெற்றி பெற வைத்தது.

கொட்டும் முரசு

கொட்டும் முரசு

புதிய கட்சி தொடங்கிய விஜயகாந்த், தனது கட்சியின் சின்னமாக, கொட்டும் முரசு சின்னத்தை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய திரைப்படங்களின் மூலம் சின்னத்தை எளிதாக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

ஊழலை துடைக்கும் துடைப்பம்

ஊழலை துடைக்கும் துடைப்பம்

ஊழலை ஒழிக்க புறப்பட்ட ஆம் ஆத்மி கட்சி தனது சின்னமாக துடைப்பம் சின்னத்தை அறிமுகப்படுத்தியது. துடைப்பம் எல்லோரும் உபயோகப்படுத்தும் ஒரு பொருள். அதனால் அது எளிதில் மக்களிடம் போய் சேர்ந்தது.

செருப்பு சின்னம்

செருப்பு சின்னம்

கிரண்குமார் தனது சின்னமாக செருப்பு சின்னத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த சின்னம் தேர்ந்தெடுக்கக் காரணம் சாதி மத பேதமின்றி சமத்துவம் தரும் சின்னம் என்கிறார் கிரண்குமார்.

மாம்பழம், பம்பரம்

மாம்பழம், பம்பரம்

பாட்டாளி மக்கள் கட்சி தனது சின்னமாக மாம்பழம் சின்னத்தையும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் குடை சின்னத்தில் போட்டியிட்டது. பின்னர்தான் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது.

பாஜகவின் தாமரை

பாஜகவின் தாமரை

பாரதீய ஜனதா கட்சி தனது சின்னமாக தாமரையை அறிமுகப்படுத்தியது, இதேபோல ஏர் உழவன், யானை, கதிர் அரிவாள் நட்சத்திரம்,

‘சின்ன’ சிக்கல்

‘சின்ன’ சிக்கல்

இன்றைக்கு இரட்டை இலையை மறையுங்கள்,.... குளத்தில் உள்ள தாமரைகளை மறையுங்கள், யானையை மூடுங்கள் என்று எதிர்கட்சிகள் அறிவித்துள்ளனர். அதேபோல செருப்பு, துடைப்பம் போன்ற சின்னங்களை எல்லோரும் உபயோகிக்கின்றனர் இதை எப்படி மறைக்க முடியும்?

சின்னங்களின் தேவைகள்

சின்னங்களின் தேவைகள்

இன்றைய தேர்தல், தலைவர்கள் பெயராலும், கட்சியின் பெயராலும் கூட்டணியின் பெயராலும் நடைபெறுகின்றன. சின்னங்கள் வெறும் குறியீடு மட்டுமே. சின்னங்களை மீறி வாக்களிக்கும் திறன் படைத்தவர்களாக வாக்காளர்கள் படிப்பறிவு பெற்றுள்ளனர். சின்னத்தால் மட்டுமே வெற்றிபெற முடியாது, செயல்பாடுகள்தான் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்றன என்கின்றனர் இன்றைய வாக்காளர்கள்.

English summary
Here is the list of different election symbol of political parties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X