For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோவையில் காட்டு யானை தாக்கி பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் உதவி: முதல்வர்

கோவை போத்தனுர் அருகே காட்டு யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: கோவை மாவட்டம் போத்தனுர் அருகில் உள்ள வெள்ளலூர் பகுதியில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் நுழைந்து தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை!

" கோயம்புத்தூர் மாவட் டம், குறிச்சி மற்றும் வெள்ளலூர் கிராமத்தில் இன்று அதிகாலை, காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்த குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகள் காயத்திரி, வெள்ளலூர் கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி நாகரத்தினம், மாரியப்பன் மனைவி ஜோதிமணி மற்றும் பழனிசாமி ஆகிய நான்கு நபர்களை தாக்கி, அதனால் அவர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து மிகவும் துயரம் அடைந்தேன்.

Elephant killed four in coimbatore,TN CM Announces Compensation to those Families

காட்டு யானை தாக்கியதில் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிசிச்சை அளிக்க கோயம்புத்தூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரி களுக்கும் நான் உத்தர விட்டுள்ளேன்.

இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காட்டு யானை தாக்கி உயிரிழந்தவர்களின் வாரிசு தாரர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 59,100 ரூபாயும் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்." என்று முதல்வர் அதில் கூறியுள்ளார்.

English summary
Elephant killed four in Coimbatore,Tamil Nadu Chief Minister Edapaadi K Planisamy Announces Compensation to those Families.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X