ஜெயலலிதாவின் படம் திறந்ததை ஏற்கமுடியாது.. விஜயதாரணி மீது நடவடிக்கை வேண்டும்- ஈவிகேஎஸ் இளங்கோவன்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திரு உருவப்படம் திறப்பு- வீடியோ

  சென்னை: சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டதை ஏற்கமுடியாது என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார்

  தமிழக சட்டசபையில் நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிரே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படம் வைக்கப்பட்டுள்ளது.

  EVKS Elangovan opposes Jayalalitha photo in Assembly

  7 அடி உயரம் , 5 அடி அங்குலத்தில் அவரது படம் திறக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் படத்திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன.

  இந்த படத்திறப்பு விழாவுக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. ஆனால் அதே கட்சியை சேர்ந்த விஜயதாரணி எம்எல்ஏ இதை வரவேற்றுள்ளார். ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்த சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.

  தற்போது இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி சட்டசபையில் ஜெயலலிதாவின் படம் திறக்கப்பட்டதை ஏற்கமுடியாது என்றுள்ளார்.

  மேலும் ''விஜயதரணி எதிர்மறையான கருத்து தெரிவித்து இருக்கிறார். விஜயதரணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Jayalalitha's photo is being inaugurated in Assembly yesterday. Opposition parties boycott this function. She gets the pride that she was the first lady whose photo in inaugurated in Assembly. EVKS Elangovan opposes Jayalalitha photo in Assembly.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற