For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையானது காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு- முன்னாள் நீதிபதி ராஜன் #cauvery

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு இணையான காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் முன்னாள் நீதிபதி ஏ.கே. ராஜன் கூறியதாவது:

காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியிட்டாலே சட்ட அங்கீகாரத்தை பெற்றுவிட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு இணையான காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அமல்படுத்தியே ஆக வேண்டும்.

Ex Judge AK Rajan speaks on Cauvery

மத்திய அரசின் வாதத்தால் உச்சநீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது. உச்சநீதிமன்றத்தில் விசாரணையின் போது மேலாண் வாரியம் அமைக்கப் போவதாக அரசு வழக்கறிஞர் கூறினார்.

எனவே வாரியத்தை அமைக்கும் கடமை மத்திய அரசுக்கே உள்ளது. நாடாளுமன்றத்திற்கு இல்லை. நடுவர் மன்ற தீர்ப்பாயம் அளித்த இறுதி தீர்ப்பை நாடாளுமன்றம் கூட விவாதத்திற்கு எடுக்க முடியாது. உச்நீதிமன்றத்தில் மத்திய அரசின் மனு காவிரி வழக்கை திசைதிருப்பும் செயல்.

இவ்வாறு ஏ.கே. ராஜன் கூறினார்.

English summary
Former Judge AK Rajan has demanded that Karnataka should implement Cauvery Tribunal's final verdict.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X