For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வானில் இன்று ரெண்டு “நிலா”- புரளிச் செய்தியை நம்பவேண்டாம்- தமிழ்நாடு அறிவியல் கழகம்!

Google Oneindia Tamil News

சென்னை: வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் எனவும், செவ்வாய் கிரகம் மிக பெரிதாக தெரியும் எனவும் வலைதளத்தில் உலாவரும் செய்திகள் புரளிதான் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர் பி.அய்யம்பெருமாள் கூறியுள்ளார்.

வானில் இன்று இரவு 2 நிலா தெரியும் என வலைதளத்தில் புரளி பரவி வருகிறது.

இதுதொடர்பாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உதவியுடன் புகைப்படங்களும் வெளிவந்துள்ளன.

 இரண்டு நிலா கட்டுக்கதை:

இரண்டு நிலா கட்டுக்கதை:

இவை வெறும் புரளிதான். இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். செவ்வாயும், பூமியும் சூரியனை மையமாக வைத்து நீள்வட்ட பாதையில் சுற்றுகின்றன.

சுற்றி வரும் கிரகங்கள்:

சுற்றி வரும் கிரகங்கள்:

இவ்வாறு ஒவ்வொரு கிரகங்களும் தன் பாதையில் சுற்றி வரும்போது, அவற்றிற்கு இடையே தொலைவு மாறி மாறி அமையும். பூமிக்கும் செவ்வாய்க்கும் இடையேயான சராசரி தொலைவு 22.5 கோடி கிலோ மீட்டர் ஆகும்.

கூடிக் குறையும் தொலைவு:

கூடிக் குறையும் தொலைவு:

மேலும், கிரகங்கள் சுற்றும் பாதை எப்போதும் ஒரேமாதிரி இருக்காது. நீள்வட்ட பாதையில் உள்ள தடுமாற்றங்கள் காரணமாக ஒவ்வொரு முறையும் அருகாமையில் வரும்போதும் பூமி, செவ்வாய் தொலைவு சற்றே கூடி குறையும்.

5.5 கோடி கிலோ மீட்டர்:

5.5 கோடி கிலோ மீட்டர்:

கடந்த 2003 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27 ஆம் தேதி பூமிக்கும் செவ்வாய்க்கும் உள்ள தொலைவு 5.5 கோடி கிலோ மீட்டராக இருந்தது. இதுதான் கடந்த 6 ஆயிரம் ஆண்டுகளில் மிக குறைவான தொலைவாக இருந்தது.

ஒளிப்புள்ளியாக தெரியும்:

ஒளிப்புள்ளியாக தெரியும்:

அதுபோல 2 கிரகங்களும் மிக அருகே வரும் நிலை மறுபடியும் 2287 ஆம் ஆண்டில் தான் ஏற்படும். எனினும், இந்த நாட்களிலும் வெறும் கண்களுக்கு ஒளி புள்ளியாகத்தான் செவ்வாய் தென்படும். எனவே அறிவியல் பூர்வமற்ற விஷயங்களை யாரும் நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார்.

English summary
Fake news is spread over the internet about two moons seen in sky today. Tamil Nadu science and technology centre’s director says this is fake information only, don’t trust this news.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X