For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் திடீர் போராட்டம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தேசிய தென்னக நதிகள் இணைப்பு அமைப்பு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், 41 நாட்களாக, டெல்லி, ஜந்தர் மந்தரில், போராட்டம் நடத்தி வந்த தமிழக விவசாயிகள், ரயிலில் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.

சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: டெல்லியில் போராட்டம் நடத்திய போது கொலை வழக்கு போடுவோம் என மிரட்டல்கள் வந்தன. பல்வேறு மிரட்டல்கள் நடுவே போராட்டத்தை முடித்துள்ளோம்.

Farmers protested at central railway station in Chennai

கோரிக்கைகளை நிறைவேற்றி தர நடவடிக்கை எடுப்பதாக, மத்திய இணை அமைச்சர பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு அளித்துள்ளனர். இந்த ஆதரவால் 15 நாட்களில் முடிவு சொல்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு மூலம் நல்ல தீர்வு கிடைக்காவிட்டால் மே 25 முதல் டெல்லியில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும். பிரதமர் மோடி பார்க்க மறுத்ததால்தான் அவரது அலுவலகம் முன்பு நிர்வாண போராட்டம் நடந்தினோம் என்றார்.

இதனிடையே சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷமிட்டனர்.
சென்டிரலில் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தால் எழும்பூரில் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் எச்சரிக்கைவிடுத்தோம்.

English summary
Farmers who retured from Delhi protested at central railway station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X