வெளியானது திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்.. தமிழகத்தில் எவ்வளவு வாக்காளர்கள் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 5 கோடியே 86 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

தமிழகத்தில், இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதிநாளாக கொண்டு 18-வயது நிறைவடைந்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணி நடைபெற்றது. கடந்த ஆண்டு, அக்டோபர் 3-ம் தேதி இதற்கான திருத்தப் பணிகள் தொடங்கப்பட்டன.

Finalized TN Voters List Released Today

இந்நிலையில் இன்று திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, தமிழகத்தில் உள்ள 7 கோடியே 93 லட்சத்து 78 ஆயிரத்து 485 மக்கள் தொகையில், 5 கோடியே 86லட்சத்து 86 ஆயிரத்து 541 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், 2கோடியே 90லட்சத்து 30 ஆயிரத்து 400 ஆண், 2கோடியே 96லட்சத்து 30 ஆயிரத்து 944 பெண் மற்றும் இதர பாலின வாக்காளர்கள் 5 ஆயிரத்து 242 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அந்தந்த மாவட்டங்களில் மாநகராட்சிகளில் ஆணையர்களும், மாவட்டங்களில் ஆட்சியர்களும் இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடுகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Finalized TN Voters List Released Today. According to the Election Commission their are 5.86 Crore voters in TN

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற