நல்லாண்டார்கொல்லை ஓஎன்ஜிசி கிணற்றில் தீ- ஆய்வுக்கு சென்ற வட்டாட்சியரை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil
நல்லாண்டார்கொல்லை ஓஎன்ஜிசி கிணற்றில் தீ | Oneindia Tamil

புதுக்கோட்டை: நல்லாண்டார் கொல்லையில் ஓஎன்ஜிசி கழிவு ஆயில் தொட்டியில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவத்தை பார்வையிட சென்ற வட்டாட்சியர் சக்திவேலை கிராம மக்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லை கிராமத்தில் ஓஎன்ஜிசி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்குள்ள கழிவு எண்ணெய் தொட்டியில் இன்று திடீர் என தீ விபத்து ஏற்பட்டது.

Fire accident in Nallandar kollai ONGC wastage well

இதையடுத்து 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஓஎன்ஜிசி கழிவு எண்ணெய் தொட்டியில் ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில் தீவிபத்து நடைபெற்ற இடத்தை பார்வையிட சென்ற வட்டாட்சியர் சக்திவேல் சிறைபிடிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சமாதானம் செய்த ஆட்சியர் , பயன்படுத்தப்படாத எண்ணெய் கிணறுகள் மூடப்படும் என்று உறுதியளித்தார்.

இதைத் தொடர்ந்து கிராம மக்கள் வட்டாட்சியர் சக்திவேலை விடுவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Fire accident in Nallandar kollai ONGC wastage well. Fire engine department trying to douse the fire.
Please Wait while comments are loading...