சென்னை பூந்தமல்லியில் ஓடும் காரில் தீ... அதிருஷ்டவசமாக உயிர் தப்பிய 7 பேர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பூந்தமல்லியில் ஓடும் காரில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தால் அதில் இருந்த 7 பேரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ராணிப்பேட்டையிலிருந்து கார் ஒன்று பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று வந்து கொண்டிருந்தது. அதில் 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பயணம் செய்தனர்.

fire in running car near poonamallee: 7 were safe

கார் பூந்தமல்லி அருகே வந்த போது காாில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.

பின்னர் சாதுர்யமாக காரில் இருந்த அனைவரும் வெளியேறினர். இதனால் அங்கு பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதற்கான காரணம் குறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

சமீபகாலங்களில் கார் விபத்து, கார் திடீரென தீப்பிடித்து எறிதல் உள்ளிட்டவற்றால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த நேரத்தில் பரபரப்பு ஏற்படுகிறது. அது அடங்கிய பிறகு, கார் தீவிபத்துக்குள்ளானது ஏன் என்பன போன்ற தகவல்கள் வெளிவருவதில்லை.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A 7 members who were travelling from ranipet to chennai were safe when their car caught fire near poonamallee.
Please Wait while comments are loading...