For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீன்கள் வரத்து இல்லை- விலை உயர்வால் அசைவ பிரியர்கள் அவதி

மீன்களின் வரத்து இல்லாததால் விலை உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் அவதியடைந்துள்ளனர்.

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை அருகே கடலில் மீன்பாடி குறைவால் மீன்கள் அதிரடியாக உயர்ந்துள்ளது. இதனால் அசைவ பிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே உள்ள தருவைகுளத்தில் பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் கடலில் மீன்பாடி குறைவாகவே இருந்து வந்தது. குறிப்பாக கடலில் தங்கி மீன் பிடிக்கும் ஆட்களுக்கும் கடந்த சில நாட்களாக குறைந்த அளவிலேயே மீன்களுடன் கரை திரும்பினர்.

Fish rates are going high in Nellai

இதில் கேறை, சூறை, வாளைமுறா, கருப்பு களிங்கன் முறல், பச்சை களிங்கன்முறல், பறவை, விலைமீன், சென்நகரை போன்ற மீன்கள் தினமும் குறைந்த அளவிலேயே கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முதல் வகை மீன்கள் ரூ.120லிருந்து ரூ.140 வரை ஏலம் போனது. சென்நகரை ரூ.200-க்கும், ஓட்டி மீன் ரூ.70-க்கும், சின்ன விலமீன் ரூ.120-க்கும் ஏலம் போனது.

இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் கூறுகையில், கடந்த சில நாட்களாக மீன்பாடி வரதது குறைவாக இருந்து வருகிறது. வழக்கமாக பெய்ய வேண்டிய பருவமழை இந்த கடல் பகுதியில் சரியாக பெய்யாததால் அதிக அளவில் மீன்கள் சிக்குவதில்லை.

இதனால் குறைந்த அளவு மீனுடன் கரை திரும்புகின்றனர். மேலும் கார்த்திகை மாதம் துவங்க இருப்பதால் ஐயப்ப சீசனை முன்னிட்டு அசைவ பிரியர்கள் பலர் விரதம் இருக்க தொடங்கி விடுவார்கள். இந்த காரணத்தால் வியாபாரம் இன்னும் குறையும் என்று கவலை தெரிவித்தனர்.

English summary
As there is no supply of fish, their prices goes high in Nellai. People affects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X